பிப்ரவரி 17 முதல் நடைமுறைக்கு வரும் புதிய FASTag விதிமுறைகள்.. வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அப்டேட்!

பயணிகள் வசதியாக டோல் கட்டணம் செலுத்துவதற்காகவும், டோல் கேட்டுகளில் வாகனங்கள் வரிசையாக நின்று, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டது தான் ஃபாஸ்ட் டேக். இவை பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு பணமற்ற பரிவர்த்தனையையும் உறுதி செய்கிறது. இதனால் டோல் கட்டணத்தை எளிதில் செலுத்த முடிகிறது.

பயணிகளுக்கு இன்னும் வசதியான பயணத்தை வழங்குவதற்காக ஃபாஸ்ட் டேக் தொடர்பான சில அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும். அதன் படி நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஃபாஸ்ட் டேக் பாலன்ஸை சரி பார்ப்பதற்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் பிப்ரவரி 17, 2025 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க வாகன உரிமையாளர்கள் இந்த புதிய விதிகளை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பிப்ரவரி 17 முதல் நடைமுறைக்கு வரும் புதிய FASTag விதிமுறைகள்.. வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அப்டேட்!

ஃபாஸ்ட் டேக் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு சில்லறை பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் டோல் கட்டணம் செலுத்திய பிறகு பயணிகளுக்கு சில்லறை வழங்கும்போது நேரம் எடுத்துக் கொண்டது. இதற்காக கொண்டுவரப்பட்ட ஃபாஸ்ட் டேக் பயணிகளுக்கு மட்டுமல்லாமல்.. சுங்குச்சாவடிகளில் இருக்கும் ஊழியர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமைந்தது.

ஃபாஸ்ட் டேக்கின் முக்கிய மாற்றங்கள்: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஜனவரி 28, 2025 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகள் இனி சுங்கச்சாவடியில் டேக் ஸ்கேன் செய்யப்படும் நேரத்தைப் பொறுத்து சரிபார்க்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஸ்கேன் செய்வதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு: சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது ஹாட் லிஸ்டில் இருந்தாலோ அல்லது குறைந்த பாலன்ஸ் கொண்டிருந்தாலோ பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே உங்கள் ஃபாஸ்ட் டேக்கில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.

ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு: ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டால் அல்லது செயலற்ற நிலையில் இருந்தாலும் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு ஃபாஸ்ட் டேக் இந்த இரண்டு நிபந்தனைகளையுமே பூர்த்தி செய்திருந்தால் "எர்ரர் கோட் 176" உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

பொதுவாக ஃபாஸ்ட் டேக் ஒயிட் லிஸ்ட்டட் மற்றும் பிளாக் லிஸ்டேட் செய்யப்படும். ஒயிட் லிஸ்டட் என்பது ஆக்டிவாக உள்ள ஃபாஸ்ட் டேக்குகளை குறிக்கிறது. போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருப்பது, கேஒய்சி செயல்முறையை முடிக்காமல் இருப்பது, சரிபார்ப்பு செயல்முறை நிலுவையில் இருப்பது, வாகனப்பதிவு விவரங்களில் இருக்கும் முரண்பாடுகள் போன்ற காரணங்களினால் ஃபாஸ்ட் டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்படலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+