ரூ.4.99 லட்சத்தில் களமிறங்கும் மாருதி சுசுகி செலிரியோ.. முக்கிய அம்சங்கள் என்ன..!

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், இன்று புதிய மாருதி சுசுகி செலிரியோ கார் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட் ரக கார், மாருதியில் மிக பிரபலமான காராக இருந்து வருகின்றது. இந்த காரினை தற்போது மேம்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் புதிய அம்சங்களுடன் இன்று புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்ட இந்த கார், விற்பனையிலும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு விலை

எவ்வளவு விலை

அதிலும் தற்போது மாருதி சுசூகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அல்லது டீலர்ஷிப்கள் மூலமாகவோ இந்த காரினை 11,000 ரூபாயினை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த காரின் விலையானது (Ex showroom - delhi) 4.99 லட்சம் ரூபாய் முதல் 6.94 லட்சம் ரூபாய் வரையில் உள்ளது.

 சிக்கனமான எரிபொருள் கார்

சிக்கனமான எரிபொருள் கார்

இரண்டாம் தலைமுறை காரான இது, மிக சிக்கமான எரிபொருள் காராக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்தியில், அதற்கு மாற்று இல்லையா என்ற கேள்வி இருந்து வருகின்றது. ஆக இதன் காரணமாக எரிபொருள் சிக்கனமாக பயன்படுத்த முடியும் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறலாம். மேலும் இது விலையும் குறைவாக இருக்கும். மொத்தத்தில் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் மக்களுக்கு சற்று நிவாரணம் அளிக்கலாம்.

முக்கிய அம்சம் என்ன

முக்கிய அம்சம் என்ன

இந்த இரண்டாம் தலைமுறை ரக காரான இதில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது Dual VVT K10C ரக இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய செலிரியோ ரக காரானது 26.68 கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எந்த ரக கார் எவ்வளவு விலை

எந்த ரக கார் எவ்வளவு விலை

இதில் manual ரக கார்களில் LXI - 4.99 லட்சம் ரூபாயும், VXI மாடல் - 5.63 லட்சம் ரூபாயும், ZXI மாடல் - 5.94 லட்சம் ரூபாயும், ZXI+ மாடல் - 6.44 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே AGS ரக காரில், LXI மாடல்- 4.99 லட்சம் ரூபாயும், VXI மாடல் - 6.13 லட்சம் ரூபாயும், ZXI மாடல் - 6.44 லட்சம் ரூபாயும், ZXI+ மாடல் - 6.94 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

பொதுவாக மாருதி சுசுகி காரினை பொறுத்தவரையில் விலை குறைவாக இருந்தாலும், மைலேஜ் அதிகம் கிடைத்தாலும், பாதுகாப்பு எனும் விஷயத்தில் சற்று குறைவு என்ற கருத்து இருந்து வருகின்றது. ஆனால் இந்த காரில் பாதுகாப்புக்காக, செலிரியோ இரண்டு முன்பக்க ஏர் பேக்குகள், பேனலில் கேமராவுடன் ரிவர்சிங் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

இதற்கிடையில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் பங்கு விலையானது 0.87% குறைந்து அல்லது 65.90 ரூபாய் குறைந்து, 7,511.65 ரூபாயாக என் எஸ் இ-ல் காணப்படுகின்றது.
இதே பி எஸ் இ-ல் 0.90% அல்லது 68.45 ரூபாய் குறைந்து, 7,508.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 7,573.25 ரூபாயாகவும், குறைந்த விலை 7,460 ரூபாயாகவும் இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+