பெய்ஜிங்: சீனாவில் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் மீண்டு வந்தாலும் வீட்டு ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து சரிவிலேயே இருந்து வருகிறது. ஏனெனில் இங்கு வீட்டு மனைகளில் விற்பனை சரிந்து விலையும் குறைந்துள்ளது. சீனாவில் வீட்டு மனைகளின் விலை கடந்து 9 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவடைந்திருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் புதிய வீடுகளின் விலை 5.3 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத சரிவு இது என சொல்லப்படுகிறது. சீனாவின் தேசிய புள்ளியல் ஆய்வகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து 14வது மாதமாக சீனாவில் வீட்டு மனைகளின் விலை சரிவடைந்து வருகிறது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது 0. 7 சதவீதம் வரை வீடுகளின் விலை குறைந்துள்ளது. சீனாவில் ரியல் எஸ்டேட் துறை தற்போது வேகமாக சரிவடைந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு விற்பனையாகாமல் இருக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் வீட்டுமனைகளின் விலை 8 . 5 சதவீதம் வரை குறைந்திருக்கும் என அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

2025 ஆம் ஆண்டில் இது மேலும் 3.9 சதவீதம் வரை குறையும் என சொல்லப்படுகிறது. மக்கள் வீடுகளை வாங்கும் வகையிலான கொள்கை மாற்றங்களை அரசு கொண்டுவர வேண்டுமென சீனாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன.
வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஏனெனில் சீன மக்கள் வீடு உள்ளிட்ட சொத்துக்களில் முதலீடு செய்வது 10.2 சதவீதம் வரை குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் வீடுகளின் விற்பனை 18 சதவீதம் குறைந்திருப்பதாக சீன அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே சீன அரசு மக்கள் வீடுகளை வாங்க வேண்டும் என்று நோக்கில் புதிய கொள்கை மாற்றங்களை அறிவிக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஏனெனில் பல்வேறு நகரங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் இருக்கின்றன தேவை குறைவாக இருக்கும் நிலையில் விநியோகம் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அரசின் தயவை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால் சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கிறது. எனவே தொழிற்சாலை உற்பத்தி சரி, சில்லறை விற்பனை சரிவு என பெரிய நிதி சிக்கல் எழுந்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications