வருமான வரி தளத்தில் 90% பிரச்சனைகளை தீர்த்தாச்சு: இன்போசிஸ்

மத்திய நிதியமைச்சகம் மிகப்பெரிய கனவுடன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி தளத்தில் பல பிரச்சனைகள் இருந்த காரணத்தால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் மக்கள் தடுமாறினர். இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல முறையில் இன்போசிஸ் நிறுவனத்தை வெளிப்படையாகவே விமர்சித்தார்.

இந்நிலையில் இன்போசிஸ் நீண்ட கால போராட்டத்திற்கு பின் வருமான வரி தளத்தில் இருக்கும் பிரச்சனைகளை 90 சதவீதம் வரையில் தீர்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வருமான வரி தளத்தில் 90% பிரச்சனைகளை தீர்த்தாச்சு: இன்போசிஸ்

இதன் மூலம் மக்கள் இனி எவ்விதமான தங்கு தடையுமின்றி வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது இன்போசிஸ்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ், அரசின் மிக முக்கியமான திட்டத்தை கையில் எடுத்தது இல்லாமல் மிகவும் மோசமான வகையில் வருமான வரி தளத்தை கட்டமைத்திருந்த நிலையில், மக்கள் இன்போசிஸ் நிறுவனத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை பெரிய அளவில் குறைந்தது.

இந்நிலையில் தற்போது வருமான வரி துறையின் ஈபைலிங் தளத்தில் இருந்து 90 சதவீத பிரச்சனைகளை தீர்த்துள்ளதாகவும், மீதான முள்ள பிரச்சனைகளை அடுத்த 10 முதல் 15 நாளில் சரி செய்ய உள்ளதாகவும் அதற்கான பணிகளை நடைபெற்று வருவதாகவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வருமான வரி செலுத்துவோர் எவ்விதமான தடையும் இல்லாமல் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்லாம் என தெரிவித்துள்ளனர். இது இன்போசிஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளதாக முன்னணி பத்திரிக்கை தெரிவித்துள்ள நிலையில் மக்கள் கூறுவது முற்றிலும் மாற்றுப்பட்டதாக உள்ளது.

இன்னுமும் பலருக்கு OTP வராமலும், தளம் மிகவும் ஸ்லோவாக இயங்குவதாகவும், முழுமையாக வருமான வரி தாக்கல் செய்ய முடியாமல் பல பிரச்சனைகள் இருப்பதாக பல தணிக்கை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+