இந்தியாவில் டிஜிட்டல் கட்டமைப்புகளின் வளர்ச்சி பணப் பரிமாற்றங்களை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு பணம் அனுப்புவது மிகவும் சுலபமாகிவிட்டது. வங்கிக்கு சென்று சலானை பூர்த்தி செய்து வரிசையில் காத்திருக்க வேண்டிய காலமெல்லாம் மலையேறி ரொம்ப நாளாச்சு. யுபிஐ, மொபைல் பேங்கிங் அல்லது இணையதளம் வாயிலாக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் அனுப்ப முடியும்.
ஜிபே போன்ற யுபிஐ பரிமாற்ற முறையில் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு உதவுவது IMPS, NEFT, RGTS போன்றவை. இதில் IMPS எனப்படும் உடனடி பரிமாற்ற சேவையில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அடிக்கடி IMPS முறையில் பணம் அனுப்புபவர் என்றால் இது உங்களுக்கான செய்தி தான்.

IMPS என்றால் என்ன?
IMPS என்பது ஒரு நிகழ்நேர கட்டண முறை. இதன் மூலம் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இது நேஷனல் பேமண்ட்ஸ் ஆஃப் இந்தியா வழங்கும் ஒரு சிறப்பு வசதி. இரவு, பகல் என வங்கி செயல்பாட்டு நேரங்களை கணக்கில் கொள்ள வேண்டிய தேவையில்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பணத்தை அனுப்பலாம். ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை அனுப்ப பெரும்பாலானவர்கள் இந்த முறையை பயன்படுத்துகின்றனர்.
பிப்.1 முதல் IMPSக்கு புதிய விதி:
வழக்கமாக IMPS முறையில் பணம் அனுப்ப வேண்டுமெனில், நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் வங்கி கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் IFSC குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து பயனாளியாக(beneficiary) சேர்த்திருக்க வேண்டும். பயனாளியானது உறுதி செய்யப்பட்ட பின்னரே பணம் அனுப்ப முடியும். சில வங்கிகளில் இப்படி பயனாளியை சேர்க்க 24 மணி நேரம் ஆகும்.
ஆனால் பிப்ரவரி 1ஆம் தேதி ஒருவரது வங்கி கணக்கை பயனாளியாக சேர்க்காமலேயே ரூ.5 லட்சம் வரை IMPS முறையில் அனுப்ப முடியும். தி நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு கிளிக்கில் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம்:
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் IMPSஇல் பணம் அனுப்புவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. ஒருவரது வங்கி கணக்கு எண், IFSC குறியீடு ஆகியவை இனி தேவையில்லை. யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவர் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் மற்றும் அவரது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் இந்த இரண்டை மட்டும் வைத்து ரூ.5 லட்சம் வரை ஒரே கிளிக்கில் பணம் அனுப்ப முடியும்.
இதற்கு ஏற்ற வகையில் செயலிகளிலும் இணையதள பரிமாற்றங்களிலும் அப்டேட் செய்யும்படி நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா கடந்த ஆண்டே வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டது. எனவே உங்கள் மொபைல் பேங்கிங் செயலியை அப்டேட் செய்தால் இந்த வசதி கிடைக்கும்.

எப்படி பணம் அனுப்புவது?
Step 1: மொபைல் பேங்கிங் செயலிக்கு சென்று 'Fund Transfer' பிரிவை தேர்வு செய்யவும்.
Step 2: 'IMPS' என்பதை கிளிக் செய்யவும்
Step 3: யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது செல்போன் எண் மற்றும் வங்கியின் பெயரை உள்ளீடு செய்யவும்
Step 4: ரூ.5 லட்சத்திற்குள் நீங்கள் அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்யவும்
Step 5: 'Confirm' என்பதை கிளிக் செய்து OTPஐ உள்ளீடு செய்தால் போதும் பணம் சென்று விடும்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications