மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி மசோதா 2025, ஆறு தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள 1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தை (Income Tax Act, 1961) மாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட இந்த மசோதா மீது முக்கியமான மாற்றங்கள் செய்ய வேண்டும் என பரிந்துரை வைக்கப்பட்டு உள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025-ஐ (Income Tax Bill, 2025) ஆராய்ந்த நாடாளுமன்ற குழு, நிதி அமைச்சகத்திற்கு சில முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இந்த மாற்றம் சாமானிய மக்கள் முதல் பல தரப்பினரை பாதிக்கும் என்பதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளார்.

வருமான வரி ரீபண்ட்:
நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ள முக்கிய மாற்றங்களில் முதலாவதாக, தனி நபர் வரி செலுத்துவோருக்கு TDS (Tax Deducted at Source) பணத்தை திரும்ப பெறுவதற்கு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் (Due Date) பின் வரி விண்ணப்பம் தாக்கல் (ஐடிஆர்) செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் அதற்கு அபராதம் விதிக்கப்படக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பலருக்கு நிதி ரீதியான நிவாரணத்தை அளிக்கும் ஒரு பெரிய படியாக அமையும். இந்த மாற்றம் தாமதமாக வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் சாமானிய மக்களுக்கு தங்கள் பணத்தை எளிதாக மீட்டெடுக்க உதவும்.
புனித மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு வரி நிவாரணம்:
நாடாளுமன்ற குழு, புனித மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டு இயங்கி வரும் அமைப்புகளுக்கு அளிக்கப்படும் நன்கொடையில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளது. அதாவது இத்தகைய அமைப்புகளுக்கு அளிக்கப்படும் பெயரிடப்படாத நன்கொடைகளுக்கு வரி விதிப்பில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதேபோல், புனித மற்றும் தொண்டு அமைப்புகள் பெறப்பட்ட தொகை (receipts) மீது வரி விதிப்பதை நாடாளுமன்ற குழு எதிர்த்துள்ளது, ஏனெனில் இது வருமான வரி சட்டத்தின் உண்மையான வரி விதிப்பு கோட்பாட்டிற்கு முரணாக உள்ளது என விளக்கம் கொடுத்துள்ளது.
மேலும் NPO அமைப்புகளின் வருமானம் மட்டுமே வரிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று 'வருமானம்' (income) என்ற சொல்லை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இது NPOகளுக்கு நிதி ரீதியாக பலனளிக்கும் ஒரு முக்கிய முடிவாக அமையும். வருமான வரி மசோதா 2025-ல் பெயரிடப்படாமல் வரும் நன்கொடைக்கு 30 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்த நிலையில், இந்த மாற்றத்தை கொண்டு வர நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.

புதிய வரி மசோதாவில் மாற்றங்கள்:
லோக்சபா தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் தலைவராக பாஜக உறுப்பினர் பைஜெயந்த் பாண்டா தலைமையில் 2025-ஆம் ஆண்டு வருமான வரி மசோதாவை ஆய்வு செய்து கீழ் அவையில் (Lower House) சமர்ப்பித்துள்ளது. இந்த குழு, 2 முக்கியமான மாற்றங்களை புதிய மசோதாவில் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், தனி நபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். வரி செலுத்துவோருக்கு அபராதம் இல்லாமல் TDS திரும்ப பெறுவதற்கு வழி செய்வது நிதி சுமையை குறைக்கும். அதேவேளையில், NPOகளுக்கு பெயரிடப்படாத நன்கொடைகளை வரி விலக்கு அளிப்பது அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தும்.
புதிய வருமான வரி மசோதா 2025, 1961-இல் உருவாக்கப்பட்ட பழைய சட்டத்தை மாற்றி, சமூகத்திற்கு பொருத்தமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்குடன் அறிமுகம் செய்யப்பட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications