தொடர்ந்து மாற்றங்களையும், புதுமைகளைப் புகுத்த மத்திய அரசு அடுத்தடுத்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது புதிய வருமான வரி தாக்கல் செய்யும் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய வருமான வரித் தளத்தில் மக்கள் எளிதாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யவும், பிற முக்கியமான பணிகள் அனைத்தையும் எளிதாகக் கண்காணிப்பு செய்யவும் முடியும் என ஏற்கனவே வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
பழைய இணையதளம் முடக்கம்
இப்புதிய வருமான வரித் தளத்தை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் பழைய இணையதளத்தை ஜூன் 1 முதல் ஜூன் 6ஆம் தேதி வரையில் முடக்கப்பட்டு ஜூன் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
10 மணி வரை
ஆனால் ஜூன் 7ஆம் தேதி காலை 10 மணி வரையில் புதிய இணையதளம் http://www.incometax.gov.in/ பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதிய வருமான வரித் தளத்தில் அப்படி என்ன மாற்றங்கள் இருக்கப் போகிறது..?! வாங்கப் பார்ப்போம்.
ஒரே டேஷ்போர்ட்
வருமான வரி அறிக்கை அப்லோடு, செய்ய வேண்டி பணிகள், வருமான வரி அறிக்கையின் ஸ்டேட்டஸ் என அனைத்தும் ஒரே டேஷ்போர்ட்-ல் மக்களுக்குக் காண்பிக்கப்படும். இதன் மூலம் வரி செலுத்துவோர் எளிதாக வருமான வரி சார்ந்த அனைத்து பணிகளையும் செய்ய முடியும்.
இலவசமாக மென்பொருள் உதவி
வருமான வரி அறிக்கையைத் தயார் செய்யும் மென்பொருள் இலவசமாக அனைவருக்கும் அளிக்கப்படும். இதன் மூலம் சாமானிய மக்களும் எளிதாக வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் அளவிற்கு இப்புதிய வருமான வரித் தளம் http://www.incometax.gov.in/ உருவாக்கப்பட்டு உள்ளது.
மென்பொருள் மற்றும் உதவிகள்
மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இலவச மென்பொருள் மற்றும் உதவிகள் முதலில் ஐடிஆர் 1 மற்றும் 4 வருமான வரி அறிக்கை ஆகியவற்றுக்கும் (ஆப்லைன் மற்றும் ஆன்லைன்), ஐடிஆர் 2 (ஆப்லைன்) அளிக்கப்பட உள்ளது.
ஐடிஆர் 3,5,6,7 அறிக்கைகள்
அடுத்த சில வாரங்களில் ஐடிஆர் 3,5,6,7 ஆகியவற்றுக்கும் இலவச மென்பொருள் மற்றும் உதவிகள் ஆகியவற்றை அளிக்க மத்திய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
தனிநபர் தகவல்கள் அப்டேட்
இப்புதிய http://www.incometax.gov.in/ வருமான வரித்தளத்தில் வருமான வரி செலுத்துவோர் சம்பளம், வீட்டு மனைகள், வர்த்தகம் அல்லது வேலை குறித்து ஐடிஆர்-ல் proactive முறையில் அப்டேட் செய்யலாம்.
டிடிஎஸ் மற்றும் எஸ்எப்டி அறிக்கை
அப்டேட் செய்யப்பட்ட தரவுகள் அனைத்தும் ஜூன் 30, 2021ஆம் தேதிக்கு பின்பும் டிடிஎஸ் மற்றும் எஸ்எப்டி அறிக்கையில் புதுப்பிக்கப்படும்.
புதிய கால் சென்டர்
வருமான வரி செலுத்துவோரின் கேள்விகள் மற்றும் குழப்பங்களைத் தீர்க்க புதிய கால் சென்டர் நிறுவ முடிவு செய்துள்ளது வருமான வரித்துறை. இதுமட்டும் அல்லாமல் FAQs, User Manuals, வீடியோ, லைவ் சேட்பாட் ஆகியவற்றையும் கொண்டு வர மத்திய வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
மொபைல் ஆப்
ஜூன் 18ஆம் தேதிக்குப் பின் வருமான வரித்தளத்தின் புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications