ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் தரும் வாடகை - இல்லா தங்குமிடங்களுக்கு இனி வருமான வரியில் குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்படும். இதனால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளம் அதிகரிக்கும். இந்தப் புதிய விதி செப்டம்பர் 1, 2023 முதல் அமலானது.
தங்கள் ஊழியர்களுக்கு வாடகையில்லா வீடுகளை, தங்குமிடங்களை நிறுவனங்கள் தந்தால் அதற்காக தற்போது வருமான வரித்துறை பெரும் நிவாரணத்தை அறிவித்துள்ளது. இது போன்ற விடுதிகளில் தங்கும் ஊழியர்களுக்கான வரியை குறைத்துள்ளது.

நிறுவனத்தின் வாடகை இல்லாத வீடுகளுக்கான பொருந்தும் வருமான வரி விதிகள்:
1) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10 சதவீதம் சம்பளம் வரியாக செலுத்த வேண்டும்.
2) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஆனால் 40 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் நகரங்களில் சம்பளத்தில் 7.5 சதவீதம் வரியாக செலுத்த வேண்டும்.
இதற்கு முன்னால் இந்திய மெட்ரோ நகரங்களில் வசிக்கும் ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதம் வீட்டு வாடகை அலவன்ஸ் வரி விலக்காக அனுமதிக்கப்பட்டது. ஆனால் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் 40 சதவீதம்தான் வீட்டுவாடகை அலவன்ஸ் வரிவிலக்கு தரப்பட்டது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வீட்டு வாடகை அலவன்ஸ் இருந்தால் அதில் 5 சதவீதத்தை டிடிஎஸ்ஸாக செலுத்த வேண்டும்.
மத்திய அரசின் வருமான வரித்துறை அமைச்சகம் திடீரென வெளியிட்டுள்ள இந்த புதிய விதி ஊழியர்களுக்கு நல்லதா கெட்டதா என்பது பற்றிய விவாதம் நாடெங்கும் சூடு பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications