வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 1962ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டம் தற்போதைய காலத்துக்கு பொருந்துவதாக இல்லை என புகார் கூறப்பட்டு வந்தது. இதனை அடுத்து மத்திய அரசு புதிய வருமான வரி சட்டத்தை கொண்டு வந்துள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்தி வருமான வரி சட்டம் 1962க்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் 2026 நடைமுறைக்கு வருகிறது. பழைய வரி நடைமுறையில் இருந்த பல குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் வருமான வரி கணக்கு தாக்கலை எளிமையாக்கும் வகையில் புதிய வரிசட்டம் இருக்கும் என்கிறது மத்திய அரசு.

இந்த புதிய வருமான வரி சட்டத்தில் பான் கார்டு பயன்பாடு தொடங்கி படிவம் 16 வரை பெருமளவிலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து வைத்து கொள்வதன் மூலம் நம்மால் பல ஆயிரங்களில் வருமான வரியை சேமிக்க முடியும். புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி உச்ச வரம்பில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. நாம் பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டிலுமே வரி தாக்கல் செய்யலாம்.

வீட்டு வாடகை அலொவென்ஸை குறிப்பிட்டு வருமான வரி விலக்கு பெறுவதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை நகரங்களில் வசிப்பவர்கள் மட்டுமே சம்பளத்தில் 50% வரை குறிப்பிட்டு வீட்டு வாடகை அலொவென்ஸ் வரி விலக்கு பெறலாம் என இருந்த நிலையில் அது தற்போது ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
எனவே இந்த நகரங்களில் வசிக்கக்கூடிய தனிநபர்கள் தங்களின் சம்பளத்தில் 50 சதவீத தொகையை வீட்டு வாடகை அலோவென்ஸ் என குறிப்பிட்டு வரிவிலக்கு கோர முடியும் மற்ற நகரங்களில் வசிப்பவர்கள் தங்களுடைய சம்பளத்தில் 40% தொகையை வீட்டு வாடகை அலொவென்ஸாக காட்டலாம்.
அதே போல குழந்தைகளுக்கான மாதாந்திர கல்விச் செலவுக்கான அலொவென்ஸுக்கு தரும் வரி விலக்கு என்பது மாதம் 100 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதிகபட்சம் உங்களுடைய இரண்டு குழந்தைகள் வரை நீங்கள் மாதாந்திர கல்வி செலவு அலொவென்ஸை குறிப்பிட்டு வரிவிலக்கு கோரமுடியும். அதே போல உங்கள் குழந்தைகள் விடுதிகளில் தங்கி படிக்கும் போது அதற்கான செலவு 9000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும்.
இனி ஃபார்ம் 16 எனப்படும் படிவம் 16 இருக்காது அதற்கு மாற்றாக படிவம் 130 பயன்பாட்டுக்கு வருகிறது. அதே போல பழைய சட்டத்தில் இருந்த பிரிவுகளின் எண்ணிக்கை 800ஐ இதில் 536ஆகவும் சாப்டர்களின் எண்ணிக்கை 47இல் இருந்து 23ஆகவும் குறைத்துள்ளனர். வருமான வரி படிவங்களும் மாற உள்ளன. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது assessment year, financial year என்ற கான்செப்ட் முன்பு பின்பற்றப்பட்டது. இனி நாம் கணக்கு தாக்கல் செய்யும் Tax year என்பது மட்டுமே காட்டும் என்பதால் குழப்பம் இருக்காது.


Click it and Unblock the Notifications