ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிப்பில் முக்கிய மாற்றம் - முழு விபரம்

ஏப்ரல் 1ம் தேதி புதிய நிதியாண்டின் முதல் நாள், 2023-24 ஆம் நிதியாண்டு துவங்கி உடன் வீட்டு பட்ஜெட் முதல் நிறுவனங்களின் பட்ஜெட் வரையில் திறக்கபடும். இதன் மூலம் ஏப்ரல் மாதம் சந்தையில் பணபுழக்கமும், முதலீடும் அதிகரிக்கும்.

இந்த நிலையில் பட்ஜெட் அறிவிப்புகள் வாயிலாக புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளாத நிலையில் மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பல உள்ளது. ஏப்ரல் 1 முதல் வரும் மாற்றங்கள் உங்கள் பணம் மற்றும் வரிகளை பாதிக்கும் என்பதால் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏப்ரல் 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் அனைத்து வருமான வரி மாற்றங்களும் உங்களுக்காக தொகுத்துள்ளோம். இது 2023- 24 ஆம் நிதியாண்டுக்கான வரி திட்டமிலுக்கு உங்களுக்கு பயன்படும்.

7 லட்சம்

7 லட்சம்

தனிநபர், மாத சம்பளக்காரர்கள் சுமையை குறைக்கும் வகையில் பட்ஜெட் அறிவிப்பில் புதிய வருமான வரி முறையின் கீழ் 7 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் (Tax rebate) அறிவிக்கப்பட்டது யாராலும் மறக்க முடியாது. இன்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவது மட்டும் அல்லாமல் 2023-24 ஆம் நிதியாண்டு முதல் இது இயக்கப்படுகிறது.

தற்போது புதிய வருமான வரி முறையின் கீழ் இந்த டாக்ஸ் ரிபேட் அளவு 5 லட்சமாக உள்ளது.

வரி விதிப்பு பலகை

வரி விதிப்பு பலகை

நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்த புதிய வருமான வரி விதிப்பு முறையில் இருக்கும் வரி பலகை எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக பட்ஜெட் அறிவிப்பில் குறைக்கப்பட்டது. இப்புதிய மாற்றம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஜீரோ வரி விதிப்பு

ஜீரோ வரி விதிப்பு

இது மட்டும் அல்லாமல் 2.5 லட்சமாக இருந்த ஜீரோ வரி விதிப்பு அளவு தற்போது புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏப்ரல் 1 முதல் புதிய வரி பலகை

ஏப்ரல் 1 முதல் புதிய வரி பலகை

புதிய வருமான வரி விதிப்பு முறையில் ஏப்ரல் 1 முதல் துவங்கும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கு நடைமுறைக்கு வரும் புதிய வரி பலகை

0 - 300000 : 0 சதவீத வரி
300000-600000 : 5 சதவீத வரி
600000 -900000 : 10 சதவீத வரி
900000 - 1200000 : 15 சதவீத வரி
1200000 -1500000 : 20 சதவீத வரி
1500000 ரூபாய்க்கு மேல் : 30 சதவீத வரி

standard deduction சலுகை

standard deduction சலுகை

அனைத்து மாத சம்பளக்காரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அளிக்கப்படும் standard deduction சலுகை ஏப்ரல் 1 முதல் துவங்கும் 2023-24 ஆம் நிதியாண்டில் புதிய வருமான வரி விதிப்பு கீழ் 52500 ரூபாய் அளிக்கப்படுகிறது.

இது புதிய வருமான வரி விதிப்பு முறையே தேர்வு செய்வோருக்குக் கூடுதல் லாபத்தை அளிக்கப்பட உள்ளது. அது 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்து போது பயன்படுத்த முடியும்.

உச்சபட்ச வரி

உச்சபட்ச வரி

இந்தியாவில் அதிகப்படியான வரி தற்போது 42 சதவீதமாக உள்ளது. அதிகப்படியான வருமான வரி அளவீட்டைக் குறைக்கும் விதமாக வருமான வரி விதிப்பில் இருக்கும் சர்சார்ஜ் அளவீட்டை 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்து மத்திய அரசு. இதன் மூலம் தற்போது அதிகப்படியான வரி விதிப்பு 42 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாகக் குறைய உள்ளது, இந்த மாற்றம் ஏப்ரல் 1 முதல் துவங்கும் 2023-24 ஆம் நிதியாண்டுக்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

லீவ் என்கேஷ்மென்ட்

லீவ் என்கேஷ்மென்ட்

லீவ் என்கேஷ்மென்ட் கீழ் 3 லட்சமாக இருந்த வருமான வரி விலக்கு நிலையில், 2002க்கு பின்பு மாறாமல் அப்படியே இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான அதிகப்படியான சம்பள உயர்வைப் பொருத்து லீவ் என்கேஷ்மெனட் வரம்பை 3 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

புதிய வருமான வரி விதிப்பு முறை

புதிய வருமான வரி விதிப்பு முறை

இனி புதிய வருமான வரி விதிப்பு முறை தான் அனைவருக்குமான வரி விதிப்பு முறை, அதாவது Default வரி விதிப்பு முறை. இதேவேளையில் பழைய வரி விதிப்பு முறையும் பயன்படுத்திக்கொள்ள அரசு வருமான வரி செலுத்துவோருக்கு வாய்ப்பு அளிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+