சென்னை, மதுரை, திருச்சி, ஓசூர் என பஸ் ரூட் போல் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தனது அலுவலகத்தையும், உற்பத்தி தளத்தையும் அமைக்கும் திட்டத்தை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் முதல்வர் ஸ்டாலின் தனது அமெரிக்கப் பயணத்தை நிறைவு செய்து கிளம்பிய நிலையில், சனிக்கிழமை காலையில் சென்னையில் தரையிறங்க உள்ளனர். முக.ஸ்டாலினின் தலைமையிலான அணி இந்த அமெரிக்கப் பயணத்தில் சுமார் 17 நிறுவனங்களுடன் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உள்ளது.

மறுபுறம் தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டின் திறன்மிக்க ஊழியர்கள் மீதான நம்பிக்கையில் அடுத்தடுத்து முக்கியமான நகரங்களில் தனது அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்து இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
சென்னை: டென்மார்க்கை தளமாகக் கொண்ட ஃபின்டெக் நிறுவனமான PLEO, சென்னையில் மில்லேனியா பிசினஸ் பார்க்கில் கோவர்க்ஸ் தனது முதல் இந்திய டெவலப்மென்ட் சென்டரை திறந்துள்ளது.
இதேபோல் பிரபல SAAS நிறுவனமான IBS சாஃப்ட்வேர், இதே மில்லேனியா பிசினஸ் பார்க்கில் தனது புதிய டெவலப்மென்ட் சென்டரை திறந்துள்ளது.
மதுரை: அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹெல்த்கேர் மற்றும் AI அடிப்படையிலான நிறுவனமான "INFINX", ELCOT வடபழஞ்சி, மதுரையில் 'GTD' மையத்தை நிறுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. INFINX மதுரையில் நிலம் மற்றும் கூடுதல் அலுவலக இடத்தை பெற உள்ளது.
இது தவிர, இன்னொரு பெரிய சுகாதார நிறுவனம் அடுத்த வாரம் இப்பகுதியில் அலுவலக இடத்தை பார்வையிட வருகிறது. ஒரு நிறுவனம் அலுவலகம் செயல்பாட்டை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட ப்ராடெக்ட் & சர்வீஸ் நிறுவனமான Techno Genesis மதுரை எல்காட் ஐடி பார்க்கில் தனது புதிய அலுவலகத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.
திருச்சி: ரானே குழுத்திடன்-ஜெர்மனியின் ZF குழுவுடன் கூட்டணியில் உருவான ஜேஎப் ரானே ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் திருச்சியில் குடியிருப்பு பாதுகாப்பு வணிகத்திற்கான புதிய இன்ஃப்ளேட்டர் தொழிற்சாலை மற்றும் ஸ்லெட் சோதனை தளத்தை இன்று திறந்துள்ளது. இன்ஃப்ளேட்டர் மற்றும் ஸ்லெட் வசதியை அமைப்பதற்காக இந்நிறுவனம் சுமார் ரூ.100 கோடி முதலீடு செய்துள்ளது.
ஓசூர்: அமெரிக்காவைச் சேர்ந்த ரேபிட் குளோபல் பிசினஸ் சலூஷன்ஸ் இன்க் (RGBSI) என்ற நிறுவனம், தமிழ்நாட்டின் ஓசூரில் ₹100 கோடி முதலீட்டில் நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிமேட்டிக்ஸ் உற்பத்தி தொழிற்சாலை நிறுவ உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசு அமெரிக்காவின் கட்டுமான மற்றும் பொறியியல் உபகரணங்கள் தயாரிப்பாளரான கேட்டர்பில்லர் இன்க், கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தனது தற்போதைய பிரிவுகளை 500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications