அமெரிக்காவின் முன்னணி டெக் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 14 மற்றும் புதிய ஆப்பிள் வாட்ச் ஆகியவை மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தயாரிப்புகள் மக்களைக் கவராத நிலையில் ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகியவை மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இப்புதிய தயாரிப்புகள் ரஷ்யாவில் விற்பனைக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஷ்யா உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்திற்காக அமெரிக்கா அரசு வர்த்கரம், பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனால் அமெரிக்கத் தயாரிப்புகள் எதுவும் ரஷ்யா வாங்க முடியாது என்ற நிலை இருந்தது. இதற்கிடையில் ரஷ்யா parallel import திட்டத்தை அறிமுகம் செய்தது.
ஐபோன் முதல் டெஸ்லா வரை
இத்திட்டம் மூலம் தற்போது ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள ஐபோன் முதல் டெஸ்லா கார்கள் வரையில் ரஷ்யாவில் இறக்குமதி செய்ய முடியும் என ரஷ்ய அரசின் உயர் அதிகாரி RIA Novosti-க்குத் தெரிவித்துள்ளார். இது அமெரிக்கா-வை மட்டும் அல்லாமல் ரஷ்யா மீது தடை விதித்த அனைத்து நாடுகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
parallel import திட்டம்
ரஷ்யா உக்ரைன் மீதான போர் மார்ச் மாதம் துவங்கியது, அடுத்த சில நாட்களிலேயே உலக நாடுகள் தடை விதித்தது. இதனால் மார்ச் மாதத்தில் ரஷ்யா parallel import திட்டத்தை அறிமுகம் செய்து அந்நாட்டு ரீடைலர்கள் வெளிநாடுகளில் இருந்து டிரேட்மார்க் உரிமையாளர் ஒப்புதல் இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது.
டெனிஸ் மந்துரோவ்
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதன்கிழமை அறிமுகம் செய்த புதிய ஐபோன்-களை ரஷ்யாவில் இத்திட்டம் மூலம் இறக்குமதி செய்ய முடியுமா எனக் கேட்டதற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டெனிஸ் மந்துரோவ்..ஏன் முடியாது..? நுகர்வோர் இந்தப் போன்களை வாங்க விரும்பினால், கட்டாயம் வாய்ப்பு இருக்கு எனப் பதில் அளித்துள்ளார்.
ரஷ்ய ஆப்பிள் ஸ்டோர்
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, மார்ச் மாதத்தில் ரஷ்யாவில் ஆப்பிள் புதிய தயாரிப்பு விற்பனையை நிறுத்தியது, இருப்பினும் ஐபோன், மேக்புக் மற்றும் பிற ஆப்பிள் பொருட்கள் ரஷ்ய கடைகளில் கிடைக்கின்றன. ஏனெனில் சில்லறை விற்பனையாளர்கள் தங்களுடைய மீதமுள்ள பழைய மாடல்களை விற்று, புதிதாக வெளியிடப்பட்ட கருவிகளைப் புதிய இறக்குமதி திட்டம் மூலம் கைப்பற்ற முடிவு செய்துள்ளனர்.
மொபைல் நெட்வொர்க் MTS
வியாழக்கிழமை காலை ரஷ்ய மொபைல் நெட்வொர்க் MTS ஏற்கனவே புதிய ஐபோன் 14 மாடல்களை முன்கூட்டிய ஆர்டரில் விற்பனை செய்தது. 128ஜிபி பதிப்பின் விலை 84,990 ரூபிள் ($1,398) இலிருந்து தொடங்குகிறது. MTS டெலிவரிக்கு 120 நாட்கள் வரை ஆகலாம் என்றும், தயாரிப்புகளை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டால் ஆர்டர்களை ரத்து செய்யும் உரிமையைக் கொண்டு உள்ளது.
மேற்கத்திய தயாரிப்புகள்
ஆடம்பர ஆடைகள் முதல் கார்கள் வரை மேற்கத்திய தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம் இறக்குமதி இந்த ஆண்டு 16 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என்று துணைப் பிரதமராகவும் இருக்கும் மந்துரோவ் தெரிவித்துள்ளார். இது ரஷ்யாவின் 2021 இறக்குமதியில் 4%க்குச் சமமானதாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications