வி.நாராயணன்:சந்திரயான்-2 தோல்வியில் உதயமான சூப்பர் ஹீரோ..சந்திரயான்-3 வெற்றிக்குக் காரணம் இவர் தான்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ-வின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தமிழர்களுக்குக் கூடுதல் பெருமைகொள்ளும் தருணமாக உள்ளது.

வி.நாராயணன் தற்போது எஸ் சோமநாத் பதவியில் அமரப்போகிறார். கடந்த 10 வருடத்தில் இஸ்ரோ பல புதிய மற்றும் புரட்சிகரமான சாதனைகளைச் செய்திருக்கும் வேளையில் நாராயணன் நியமனம் இந்த பயணத்தை வேகப்படுத்திப் பல புதிய சரித்திரத்தை இஸ்ரோ படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வி.நாராயணன்:சந்திரயான்-2 தோல்வியில் உதயமான சூப்பர் ஹீரோ..சந்திரயான்-3 வெற்றிக்குக் காரணம் இவர் தான்!

வி.நாராயணன் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்பார் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் சேர்மன் பதவியில் இருப்பார். வி.நாராயணன்-க்கு இரட்டை பதவி அளிக்கப்பட உள்ளது, இஸ்ரோவின் தலைவர் மற்றும் விண்வெளி துறையின் செயலாளர் பதவியும் அளிக்கப்பட உள்ளது. யார் இந்த வி.நாராயணன்..? இதற்கு முன்பு என்ன பதவியில் இவர் இருந்தார்..? ISRO சேர்மன் பதவி அளிக்க என்ன காரணம்..?

சந்திரயான்-3 வெற்றியில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானி வி.நாராயணன்: சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளானதையடுத்து பிரச்சனையைப் பகுப்பாய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை இஸ்ரோ அமைத்தது. இந்த அமைப்பிற்கு வி.நாராயணன் தலைமை தாங்கி, அதற்கான தீர்வைக் கண்டறிந்தவர் தான் இன்றைய நாயகன், நாளைய தலைவர் வி.நாராயணன்.

சந்திரயான்-2 திட்டத்தின் தோல்வியை ஆய்வு செய்து, அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுத்த விஞ்ஞானி தான் வி.நாராயணன், இதனாலேயே கடந்த சில வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) முக்கிய அங்கமாகத் திகழ்ந்து வருகிறார்.

சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி தரையிறங்கத் தவறி விழுந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தோல்வி பகுப்பாய்வு குழுவிற்கு தலைமை தாங்கிய இவர், தோல்விக்குக் காரணமான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்யும் வழிகளைக் கண்டறிந்தார்.

இவரது வழிகாட்டுதலின் பேரில், சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றின் வடிவமைப்பு, இன்ஜினியரிங் மற்றும் செயல்பாட்டு அம்சங்களில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் விளைவாக, சந்திரயான்-3 திட்டம் சிறப்பாக செயல்பட்டு, விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகச் சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

இந்த வெற்றி இந்திய விண்வெளித்துறைக்கு மட்டுமல்ல, உலகிற்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.

முக்கிய பதவி: ராக்கெட் மற்றும் விண்கலம் உந்துசக்தி துறையில் பரந்த அனுபவம் கொண்ட நாராயணன், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பங்காற்றியுள்ளார். 1984 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஆர்.ஓ-வில் சேர்ந்ததிலிருந்து, அவர் தொடர்ந்து தனது பணியையும், பதவியிலும் முன்னேறி வருகிறார்.

இஸ்ரோவின் சேர்மன் ஆக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்பு திரவ உந்துசக்தி அமைப்புகள் மையத்தின் (LPSC) தலைவராகப் பதவி வகித்தார். இஸ்ரோ ராக்கெட்-களின் முக்கிய அமைப்பாக விளங்கும் Liquid Propulsion Systems-ஐ உருவாக்கும் அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். திரவ உந்துசக்தி அமைப்புகள் மையம் தற்போது கேரள மாநிலம் வலியமலையில் இயங்கி வருகிறது. 2018 முதல் இவர் இப்பதவியில் இருந்து வருகிறார்.

கல்வி: இந்தியாவின் மிக முக்கியமான கல்லூரிகளில் ஒன்றான IIT காரக்பூர் பட்டதாரியான நாராயணனின் கல்விப் பயணம் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. 1989 ஆம் ஆண்டு க்ரையோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற அவர் தனது வகுப்பில் முதலிடம் பெற்றார். அறிவின் தாகம் தீராத அவர் அடுத்தாக ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் முனைவர் பட்டம் 2001 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முடித்தார்.

விருதுகள்: ஐ.ஐ.டி காரக்பூரில் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி அறிவியல் சங்கத்தின் (ASI) தங்கப் பதக்கம் மற்றும் ராக்கெட் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ASI விருது உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+