வருமானவரி தாக்கல் 2026: ஜூலை 31 தான் டெட்லைன்! இந்த முறை அசால்ட்டாக இருந்தால் வேலைக்கு ஆகாது!

இன்றளவும் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கடைசி நாளன்று தாக்கல் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடுகின்றனர். அதேபோல இந்த முறையும் அசால்ட்டாக இருந்தால் வேலைக்கே ஆகாது. இந்த முறை வருமானவரித்துறை சில முக்கியமான விதிகளை வகுத்துள்ளது. அதன்படி ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான இறுதி காலக்கெடு 2026-ஆம் ஆண்டின் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த தேதியை நீட்டிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கடைசி நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யும் பலருக்கு தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் அன்றைய தேதியில் டெட்லைன் எக்ஸ்டெண்ட் செய்யப்படுமா? என்று ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். எனவே கடைசி நேர பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது.

ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட்டை (AIS) சரிபார்க்கவும்: வருமான வரி செலுத்துபவரின் மொத்த விபரமும் இந்த ஒரு ஸ்டேட்மெண்டில் இருக்கும். இதில் வரி செலுத்துபவரின் வருமானம், அவருடைய பரிவர்த்தனை விவரங்கள், எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? என்பன போன்ற அனைத்தும் தெள்ளத் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல ஃபார்ம் 26ஏஎஸ்-சிலும் உங்களுடைய விவரங்கள் துல்லியமாக பதிவாகியிருக்கும்.

வருமானவரி தாக்கல் 2026: ஜூலை 31 தான் டெட்லைன்! இந்த முறை அசால்ட்டாக இருந்தால் வேலைக்கு ஆகாது!

நீங்கள் வைத்திருக்கும் விபரங்களும் இந்த ஏஐஎஸ் மற்றும் ஃபார்ம் 26 ஸ்டேட்மெண்டில் இருக்கும் விபரங்களும் ஒன்றாக இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வருமானவரித் துறையினர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வாய்ப்பிருக்கிறது.

முன்கூட்டியே ரிலீஸ் செய்யப்பட்ட ஃபார்ம்: கடந்த ஆண்டு ஃபார்ம் ரிலீஸ் செய்யப்படுவதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படியில்லை. 2027-ஆம் மதிப்பீட்டாண்டிற்கான ஐடிஆர் படிவங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் டெட்லைன் நீட்டிக்கப்படுமா? என்று காத்திருக்காமல் விரைந்து செயல்படுவது அவசியம்.

புதிய ரிப்போர்ட்டிங் விதிகள்: இதுவரை இல்லாத சில விதிகளையும் இந்த முறை வருமானவரி துறை புதிதாக சேர்த்துள்ளது. நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும்போது ஒரு சில விஷயங்களை கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். சம்பளம் மட்டுமின்றி நீங்கள் வேறு சிலவற்றில் முதலீடு செய்திருந்தால் அது தொடர்பான விபரங்களை வருமானவரித்துறைக்கு காண்பிக்க வேண்டும்.

சொத்து மற்றும் தங்கம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த லாபம், நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும்போது ஏற்பட்ட நஷ்டங்கள், உங்கள் அக்கவுண்டில் நடந்த அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைகள், பங்குச்சந்தையில் f&o வர்த்தகம் செய்திருந்தால் அதன் விபரங்கள் என அனைத்தையும் இந்த முறை ரிப்போர்ட்டிங் செய்வது முக்கியம். இதில் பிரச்சனை இருந்தால் உடனே ஒரு ஆடிட்டரை அணுகி உதவியை நாடலாம்.

தவறான விவரங்கள்: எந்தெந்த வழிகளில் உங்களுக்கு லாபம் கிடைக்கிறது என்பதை தனித்தனியாக பிரித்து காண்பிக்க வேண்டும். உதாரணமாக பங்குகளில் கிடைக்கும் வரி விலக்கை தங்கம் அல்லது பிற சொத்துக்களை விற்ற லாபத்திற்கு அப்ளை செய்யக்கூடாது. இப்படி மாற்றி மாற்றி வரி விலக்குகளை காண்பித்தால், நோட்டீஸ் அனுப்பப்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+