ஐடிஆர் படிவத்தில் முக்கிய மாற்றம்? யாரெல்லாம் கவனிக்க வேண்டும்? ஏப்.1 முதல் ITR தாக்கல் செய்யலாம்

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மதிப்பீட்டு ஆண்டு (AY) 2023-24க்கான வருமான வரி அறிக்கை படிவங்களை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஐடிஆர் படிவங்களை நிதியாண்டின் இறுதியில் அல்லது புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு அறிவிக்கும். ஐடிஆர் படிவங்களின் குறித்து முன்கூட்டியே அறிவிக்கும் போது அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் போதுமான நேரம் கிடைக்கும்.

2023-24 நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் படிவங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படுவதால், நிதியாண்டு முடிந்தவுடன் வரி செலுத்துவோர் விரைவில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறை இதற்கு முன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் தொடர்புடைய நிதியாண்டிற்கான ஐடிஆர் படிவங்களை அறிவிக்கும்.

புதிய ITR படிவங்களில் உள்ள மாற்றங்கள் என்ன?

ஐடிஆர் படிவங்கள்

ஐடிஆர் படிவங்கள்

ஐடிஆர் படிவங்களில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், முக்கியமான சில சிறிய மாற்றங்கள் உள்ளதை வருமான வரி செலுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். புதிய வருமான வரிப் படிவங்களில் உள்ள மாற்றங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

ஐடிஆர்-1

ஐடிஆர்-1

பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஐடிஆர்-1ல் எந்த மாற்றமும் இல்லை என்பதால் வரி செலுத்துவோர் நிம்மதி அடைவார்கள்.

மீதமுள்ள வருமான வரிப் படிவங்களில் விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளிலிருந்து வருமானத்தை அளிக்கப் புதிய அட்டவணை மூலதன ஆதாயங்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகள்

விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகள்

இந்தப் புதிய அட்டவணையில் வரி செலுத்துவோர் விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளைக் கையகப்படுத்திய தேதி, பரிமாற்ற தேதி மற்றும் கையகப்படுத்தல் செலவு மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளின் விற்பனையில் பெறப்பட்ட வருமானம் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளிலிருந்து வரும் வருமானம் காலாண்டுக்கு ஒருமுறை தெரிவிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022-23 நிதியாண்டு முதல் விர்ச்சுவல் டிஜிட்டல் சொத்துகளில் மீதான வரி விதிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன, எனவே புதிய அட்டவணை சேர்க்கப்பட்டு உள்ளது.

புதிய வரி விதிப்பு

புதிய வரி விதிப்பு


புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான கூடுதல் கேள்விகளை உள்ளடக்கிய பதில்களில் திருத்தப்பட்டுள்ளன.

கடந்த மதிப்பீட்டு ஆண்டில் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்ந்தெடுத்துள்ளாரா என்பதை வரி செலுத்துவோர் தெரிவிக்க வேண்டும், மேலும் தேர்வு செய்யப்பட்ட மதிப்பீட்டு ஆண்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வரி விதிப்பு முறை மாற்றம்

வரி விதிப்பு முறை மாற்றம்

கூடுதலாக, வரி செலுத்துவோர் முந்தைய ஆண்டில் ஏதேனும் புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகியிருக்கிறார்களா என்று கேட்கும் மற்றொரு கேள்வி சேர்க்கப்பட்டுள்ளது.

ITR படிவ வகைகள்

ITR படிவ வகைகள்

ஐடிஆர் படிவம் 1 - 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர் மற்றும் சம்பளம், ஒரு வீட்டுச் சொத்து / மற்ற ஆதாரங்கள் (வட்டி போன்றவை) மூலம் வருமானம் பெறுபவர் தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர்-2 - ₹50 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வீட்டுச் சொத்து மூலம் வருமானம் பெறுபவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்

ஐடிஆர்-3 வணிகம் / தொழில் மூலம் வருமானம் ஈட்டும் நபர்களால் தாக்கல் செய்ய வேண்டும்

ஐடிஆர் - 4 சிறிய மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வரி செலுத்துவோர் பயன்படுத்தக் கூடியது. இதில் சிறு தொழில் மூலம் வருமானம் பெறுபவர்களும் பயன்படுத்தலாம்

ITR-5 LLP, BOI, மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தாக்கல் செய்யப்படுபவை

ITR - 6 நிறுவன சட்டம் 2013 கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் இதைப் பயன்படுத்த வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+