இந்தியா ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், தற்போது சந்தையில் இருக்கும் SUV டிரென்ட்-க்கு ஏற்ற கியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய செல்டோஸ் கார்-க்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் கார் என்பது ஆடம்பர பொருள் என்பதை தாண்டி தற்போது அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் SUV கார்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் வேளையில் சரியான நேரத்தில் மக்களின் முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கியா மோட்டாஸ் தனது புதிய செல்டோஸ் கார் அறிமுகம் செய்துள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரின் முன்பதிவு ஜூலை 14 ஆம் தேதி துவங்கிய நிலையில் முதல் நாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் கியா இந்தியா நிறுவனம் இக்காருக்கு சுமார் 13,424 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. சமீபத்தில் முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்த கார்களை அறிமுகம் செய்தி போட்டியை அதிகரித்துள்ள நிலையில் புதிய கியா செல்டோஸ் காரின் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.
இதை விட முக்கியமாக செல்டோஸ் கம்யூனிட்டி அதாவாது செல்டோஸ் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் சிறப்பு திட்டமான கே-கோட் (K-CODE) மூலம் 1,973 முன்பதிவுகள் செய்யப்பட்டு உள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை மூலம் புதிதாக கார் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாகனங்கள் டெலிவரி செய்யப்படும்.
கே-கோட் முயற்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், தென் கொரிய கார் நிறுவனமான கியா இந்த திட்டத்தை தனது அடுத்தடுத்த கார் அறிமுகத்திற்கும் பயன்படுத்தும். இதன் மூலம் உண்மையான மற்றும் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பெறும் வாய்ப்பாக மாறும்.


Click it and Unblock the Notifications