இந்திய அரசு நீண்ட காலமாகவே தொழிலாளர் சட்டங்களை திருத்தி ஊழிர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், இன்றைய வர்த்தக சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நடைமுறையில் இருந்த பழைய 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு புதிய சட்டங்களா மாற்றும் பணியை முடித்துள்ளது.
நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள ஊதிய சட்டம், தொழிற்துறை உறவு சட்டம், சமூக பாதுகாப்பு சட்டம், தொழில்சார் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமை சட்டம் ஆகியவை ஊழியர்களின் சம்பளம், விடுமுறை, பணி நேரம், பணியிட பாதுகாப்பு போன்ற அடிப்படை விஷயங்களை எளிமைப்படுத்தி, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த மாற்றம் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதோடு, நிறுவனங்களின் விதி மீறல்களைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஊதியம் வரையறை மாற்றம்:
புதிய சட்ட திருத்ததில் மிக முக்கியமான மாற்றம் 'ஊதியம்' என்ற வரையறையில் செய்யப்பட்டு உள்ளது. இனி அடிப்படை ஊதியம், அகவிலைப்படி, தக்கவைக்கும் ஊதியம் (retaining allowance) ஆகியவை ஒரு ஊழியரின் மொத்த ஊதியத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது ஒரு ஊழியரின் மொத்த CTC-யில் இந்த அடிப்படை ஊதியத்தின் பங்கு குறைந்தது 50 சதவீதம் இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தை 20-30 சதவீதம் மட்டுமே வைத்து, மீத தொகைய வீட்டுவாடகை, பயணம், போனஸ் போன்ற படிகளாக அமைத்து, ஓய்வூதிய நிதி (PF), கிராச்சுவிட்டி போன்ற சமூக பாதுகாப்பு பங்களிப்புகளை குறைத்து வந்தன. இதை தவிர்க்கும் வகையில் ஊழியர்களுக்கு கூடுதலான ஓய்வூதிய பலன்களை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது
சமூக பாதுகாப்பு பங்களிப்புகளில் பெரிய மாற்றம்
இந்த மாற்றம் மூலம் இனி ஒவ்வொரு ஊழியருக்கு அளிக்கப்படும் PF, ESIC, தொழிலாளர் இழப்பீட்டு, கர்ப்பிணி உதவி போன்ற சமூக பாதுகாப்பு பங்களிப்புகளின் கணக்கீட்டை பாதிக்கும்.
உதாரணமாக ஒரு ஊழியரின் பிஎப் பங்கீடு தொகை என்பது 12 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்படுவதால், புதிய சட்ட திருத்தத்தின் அடிப்படையில் ஊதியம் உயர்வதால் PF பங்களிப்பும் அதிகரிக்கும்.
மேலும் கிராஜூவிட்டி என்பது ஒரு ஊழியர் நிறுவனத்தை விட்டு வெளியேறும் போது கடைசி வாங்கிய ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால், அடிப்படை ஊதியம் 50 சதவீதம் ஆனதால் வெளியேறும் போது கிடைக்கும் தொகை பெரிய அளவில் உயரும்.
EPFO விதிகளின்படி PFயில் ரூ.15,000 வரம்பு உள்ளதால் இந்த விதி மூலம் உடனடி தாக்கம் குறைவாக இருக்கலாம், ஆனால் ஊழியர்கள் அதிகம் பங்களிப்பு தேர்வு செய்தால் பலன் அதிகரிக்கும்.
கையில் வரும் சம்பளம் குறையலாம்
இந்த மாற்றம் ஓய்வூதிய நன்மைகளை அதிகரிக்கும் என்றாலும், ஒவ்வொரு மாதமும் கைகளுக்கு வரும் சம்பளத்தை குறைக்கலாம். CTC மாறாமல் இருந்தால், அதிக PF, கிராச்சுவிட்டி பங்களிப்புகள் ஆகியவை அதிகரிப்பதன் மூலம் ஊழியரின் கையில் வரும் சம்பள பணத்தை 5-10 சதவீதம் வரை குறைக்கும். நிறுவனங்கள் ஒருவருடைய CTCயை மாற்றாமல் அடிப்படை ஊதியத்தை உயர்த்தினால் இது ஏற்படும் என டைம்ஸ் ரிப்போர்ட் கூறுகிறது.
அகார்ட் ஜூரிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இணைப் தலைவர் அலய் ரஸ்வி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், " இந்த விதி மாற்றங்கள் இது கையில் வரும் சம்பளத்தை குறைக்கலாம், ஆனால் நிறுவனம் சம்பள அமைப்பை எப்படி மாற்றுகிறது என்பதைப் பொறுத்தது தான் அனைத்தும் நடக்கும். CTC அளவை உயர்த்தாமல் படிகளை குறைத்தால் கையில் வரும் பணம் குறையும்" என்றார்.
தற்போதைய நிலையில் நிறுவனங்கள் எப்படி இப்புதிய விதிகளை ஏற்று ஊழியர்களின் CTC அமைப்பை மறுசீரமைக்க போகிறது என்பதில் தான் அனைத்தும் உள்ளது. அடிப்படை ஊதியத்தை குறைவாக வைத்து படிகளை அதிகரித்து PF, கிராச்சுவிட்டி கடமைகளை தவிர்க்க முடியாது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் 45 நாட்களுக்குள் விரிவான விதிகள் வெளியாகும் என்று அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications