இந்திய அரசு நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. ஊதியக் சட்டம் 2019, தொழிற்துறை உறவுக் சட்டம் 2020, சமூக பாதுகாப்புக் சட்டம் 2020, தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைக் சட்டம் 2020 ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளன.
இதன் மூலம் ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நவீனமாக்கிய இந்தக் 4 சட்டங்கள் தொழிலாளர்களின் நலனை உயர்த்துவதோடு, மாறிவரும் பணி சூழலுக்கு ஏற்ப தொழில்துறையை தயார்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டம் மூலம் திருப்பூர் டெக்ஸ்டைல் ஊழியர்களுக்கும், டெக்ஸ்டைல் நிறுவனங்களின் சாதகபாதகங்கள் என்ன..?

டெக்ஸ்டைல் தொழிலாளர்களுக்கு என்ன நன்மைகள்?
டெக்ஸ்டைல் துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்தப் புதிய சட்டத்தால் பெரிதும் பயனடைவார்கள். குறிப்பாக வெளிமாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் - நேரடியாகவோ, ஒப்பந்த அடிப்படையிலோ, தானாகவோ வந்தவர்கள் என அனைச்சு தரப்பினருக்கும் - இனி சக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதோடு வெளிமாநில ஊழியர்களுக்கு நலவாரிய வசதிகள், ரேஷன் திட்ட உணவுப் பொருள் வாங்க ரேஷன் அட்டையை நாட்டில் எங்கும் பயன்படுத்தும் வசதி ஆகியவற்றைப் பெறுவார்கள். முன்பு நிலுவையில் இருந்த ஊதியப் பாக்கிகளை மூன்று ஆண்டுகள் வரை கோரி பெறலாம். இது தொழிலாளர்களுக்கு எளிதான தீர்வை உறுதி செய்கிறது.
கடைசியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் கூடுதல் நேரப் பணிக்கு இனி இரு மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று புதிய சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது ஜவுளி ஆலைகளில் அதிக நேரம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு பெரிய வருமான உயர்வைத் தரும்.
மேலும் 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை வழங்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது. இது தொழிலாளர்களிடையே முன்கூட்டியே நோய்த் தடுப்பு பழக்கத்தை வளர்க்கும்.
ஜவுளி நிறுவனங்களுக்கு புதிய கட்டாயங்கள்
டெக்ஸ்டைல் துறை நிறுவனங்கள் இப்போது புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கும் சம ஊதியம், சம வசதிகள் வழங்க வேண்டும். கூடுதல் நேர ஊதியத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் அட்டை எங்கும் பயன்படுத்தும் வசதியை உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் நிறுவனங்களின் செலவை அதிகரிக்கும்.
குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்களுக்கு இந்தப் புதிய விதிகளை அமல்படுத்துவது தொடக்கத்தில் கடினமாக இருக்கலாம். ஊதியச் செலவு உயர்வதால் லாபம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால் நீண்ட காலத்தில் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் உயர்வதாலும், சட்டரீதியான பிரச்சினைகள் குறைவதாலும் நிறுவனங்களும் பயனடையும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே அமெரிக்காவின் வரி விதிப்பால் அதிகம் பாதித்து வரும் திருப்பூர் டெக்ஸ்டைல் துறை தற்போது கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளது. திருப்பூர் டெக்ஸ்டைல் துறையில் அதிகளவில் வெளிமாநில ஊழியர்கள் பணியாற்றும் காரணத்தால் இந்த மாற்றம் இனி வரும் காலக்கட்டத்தில் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஓவர் டைம் வேலைக்கு இருமடங்கு சம்பளம் என்பது தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பெரும் சிக்கலாக மாறும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications