தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSS) என்பது நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டம். இந்தத் திட்டத்தினை எந்த ஒரு வங்கியிலோ அல்லது தபால் அலுவலகத்திலோ தொடங்கலாம். இந்தியாவில் வசிக்கும் குடிமக்களுக்கு ஒரு முக்கிய சேமிப்பு திட்டமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் செயல்பட்டு வருகிறது. சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகள் கணக்கு திறப்பதில் உள்ள முரண்பாடுகளை சரி செய்வதற்காக கொண்டு வரப்படவுள்ளன.
அதன்படி தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திலும் சில புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இரண்டு NSS 87 கணக்குகள் திறக்கப்பட்டிருந்தால் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும்.

அதன்படி NSS திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட முதல் கணக்கு தற்போதைய வட்டி விகிதத்தைப் பெறும். அதாவது தற்போது NSS திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது முதல் கணக்குக்கு பொருந்தும். இரண்டாவதாக திறக்கப்பட்ட கணக்கிற்கு அந்த கணக்கில் நிலுவையில் இருக்கும் தொகைக்கு கூடுதலாக 200 அடிப்படை புள்ளிகளுடன் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்களுக்கு வழங்கப்படும் வட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும் இந்த விதிகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.
அந்த நிபந்தனையின்படி 2 NSS 87 கணக்குகளிலும் உள்ள ஒட்டுமொத்த டெபாசிட் தொகை 1.5 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் NSS திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதைத் தாண்டி அதிகப்படியான முதலீடுகள் இருந்தால் முதலீட்டாளர்களுக்கு எந்த வட்டியும் வழங்கப்படாமல் திருப்பித் தரப்படும்.
ஜூலை 12, 2024 அன்று நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி செப்டம்பர் 30 வரை மட்டுமே இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வட்டி வழங்கப்படும். அதன் பிறகு அக்டோபர் 1-ஆம் தேதியில் இருந்து 2 கணக்குகளுக்கும் வட்டி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மூன்றாவது கணக்கு மற்றும் அடுத்தடுத்த ஒழுங்கற்ற கணக்குகளுக்கு, வட்டி எதுவும் செலுத்தப்படாது, மேலும் அசல் தொகை முதலீட்டாளருக்குத் திருப்பித் தரப்படும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications