சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. ஒரே நாளில் 5 முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஐடி ஹப்-களில் ஒன்றாக இருக்கும் சென்னை தற்போது இத்துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து சென்னையில் புதிய அலுவலகத்தைத் திறப்பது வாயிலாகவும், விரிவாக்கம் செய்து வருவது மூலம் இது ஒவ்வொரு முறையும் உறுதியாகி வருகிறது.


சமீப காலங்களில், உள்நாட்டு நிறுவனங்களைக் காட்டிலும் உலகளவிலான முன்னணி நிறுவனங்கள் பல சென்னையில் தங்கள் அலுவலகங்களை அமைத்து வருவது முக்கியமான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை மாநகரில் ஐடி மற்றும் டெக் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. ஒரே நாளில் 5 முக்கிய அறிவிப்பு..!

இந்த வரிசையில், சென்னையில் 5 நிறுவனங்கள் புதிய அலுவலகங்களை அமைப்பதற்கான இடங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ஐடி துறை மட்டும் அல்லாமல் சென்னை ஆபீஸ் ரியல் எஸ்டேட் துறைக்கு புதிய உந்துசக்தியாக விளங்குகிறது. ஒரே நேரத்தில் 5 நிறுவனமா..? ஷாக் மேல் ஷாக்.


அமெரிக்காவின் Guidehouse: அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி கன்சல்டிங் நிறுவனமான கைட்ஹவுஸ் (Guidehouse) சென்னையில் தனது இரண்டாவது டெவலப்மென்ட் சென்டரை அமைக்கவுள்ளது. இதற்காக, RMZ ஒன் பாரமவுண்ட் கட்டிடத்தில் 250,000 சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை அந்நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டின் திறமையான டெக் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ளவும், இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் Teleperformance: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னணி கன்சல்டிங் நிறுவனமான டெலிபர்ஃபார்மன்ஸ் (Teleperformance) சென்னையில் புதிய அலுவலகத்தை அமைக்கவுள்ளது. கேட்வே ஆபீஸ் பார்க் கட்டிடத்தில் இந்நிறுவனம் அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 1120 பேரை பணியில் அமர்த்துவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது Teleperformance.

செல்காம் சொல்யூஷன்ஸ்: சென்னை ஐடி வர்த்தக சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான செல்காம் சொல்யூஷன்ஸ் (Celcom Solutions) டிஎல்எஃப் போரூர் பகுதியில் புதிய அலுவலகத்தை அமைக்கவுள்ளது. இந்த புதிய அலுவலகம் மூலம், 350 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளது.

அமெரிக்காவின் Superops Tech: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சாப்ட்வேர் டெலவலப்மென்ட் நிறுவனமான சூப்பரோப்ஸ் டெக் (Superops Tech) சென்னையில் புதிய அலுவலகத்தை அமைக்கவுள்ளது. Tata Realty and Infrastructure Limited (TRIL) நிறுவனத்திடம் இருந்து இந்நிறுவனம் அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது, இந்த புதிய அலுவலகத்தில் 500 பேரை பணியில் அமர்த்த உள்ளது.

Acabes Intl: இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வரும் அகபெஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இதே TRIL நிறுவனத்திடம் இருந்து அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது, இந்த புதிய அலுவலகத்தில் 150 பேரை பணியில் அமர்த்த உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+