தமிழ்நாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து மிகப்பெரிய எலக்ட்ரிக் பைக் தொழிற்சாலையை உருவாக்கும் ஓலா நிறுவனம் அடுத்த சில மாதத்தில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை முழுமையாக முடிக்க முடிவு செய்துள்ள நிலையில், எல்கட்ரிக் பைக் விற்பனைக்கான முன்பதிவைத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் பிரியர்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், அதன் விலை மட்டுமே பலரும் அதை வாங்குவதற்குத் தயக்கம் காட்டும் காரணமாக உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஓலா நிறுவனம் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் திறன் வாய்ந்த பைக்குக்களை குறைவான விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஓலா நிறுவனம்
இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் சேவையில் மிகப்பெரிய புரட்சியைச் செய்த ஓலா நிறுவனம், இத்துறையில் முதன்மையாகவும், முன்னோடியாகவும் இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் முடிவில் இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்தைக் கைப்பற்றி ஓலா எலக்ட்ரிக் எனப் புதிய நிறுவனத்தைத் துவங்கி பைக் தயாரிக்கும் பணிகளைச் செய்து வருகிறது.
499 ரூபாய் முன்பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா எலக்ட்ரிக் கட்டப்பட்டு வரும் மாபெரும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஓலா எலக்ட்ரிக் பைக்குகளை வெறும் 499 ரூபாயில் முன்பதிவு செய்ய முடியும் என ஓலா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
முதல் நாள் இன்று
புரட்சியில் முதல் நாள் இன்று, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நாள் வந்துவிட்டது, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ தற்போது வெறும் 499 ரூபாய்க்கு முன்பதிவு செய்யலாம்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ புக் செய்யுங்கள், புரட்சியில் கலந்துகொள்ளுங்கள்.
ஆந்திரா வாடிக்கையாளர்
ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ புக் செய்தது மட்டும் அல்லாமல், தான் வசிக்கும் காவாலி என்ற பகுதியில் 3 லட்சம் மக்கள் தொகை இருப்பதாகவும், 98 பேர் ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-ஐ புக் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தங்க ஊரில் ஓலா எலக்ட்ரிக் ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இணையதளத்தில் பிரச்சனை
இன்னும் பலர் புக் செய்யும் போது இணையதளத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்-க்கு நினைத்ததை விடவும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடுமையான போட்டி
இந்தியாவில் தற்போது ஓலா நிறுவனம் மட்டும் அல்லாமல் டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ ஹோண்டா, ஏற்கனவே இருக்கும் எதர் ஆகிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கவும், விரிவாக்கம் செய்யவும் பல ஆயிரம் கோடி ரூபாய் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால் ஆட்டோமொபைல் துறைக்குப் புதிதாக வந்துள்ள ஓலா எலக்ட்ரிக் கடுமையான போட்டியை எதிர்கொள்ளப் போகிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications