2024 ஆம் நிதியாண்டு துவங்கிய உடனே மாத சம்பளக்காரர்கள் பெரும் அனைவரும் இந்த வருடத்திற்கான டாக்ஸ் டிக்லரேஷன் கொடுத்து இருப்பீர்கள். இது ஒவ்வொரு வருடமும் செய்வதுதானே இதில் என்ன இருக்கு..? என நீங்கள் கேட்கலாம். இதற்கு முக்கியமான காரணம் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் அறிக்கையில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் 2023- 24 ஆம் நிதியாண்டில் வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் புதிய வரி முறை தான் Default ஆக இருக்கும் என அறிவித்தார். மேலும் பழைய வருமான வரி முறை தேவையெனில் முறையாக அதை டிக்லர் செய்ய வேண்டும் என்னும் குறிப்பிட்டார். இந்த தேர்வை சரியாக செய்ய முடியாத நிலையில் என்ன நடக்கும்.

மாத சம்பளக்காரர்கள் பல வருடங்களாக பல வரி சேமிப்புகளை செய்திருக்கும் வேளையில் பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்யாமல் இருந்தால் அவர்களின் மொத்த வருமானத்தில் புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் வரி பிடித்தம் செய்யப்படும். இதை மத்திய நேரடி வரி வாரியமும் உறுதி செய்துள்ளது. ஊழியரால் தங்களுடைய வரி முறையை குறிப்பிடாத பட்சத்தில் புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் தான் கணக்கிடப்படும் என விளக்கியுள்ளது.
இதேபோல் நீங்க பணியாற்றும் நிறுவனமும் நீங்கள் கொடுக்கும் வருமான வரி விதிப்பு முறையின் அடிப்படையில் தான் ஒவ்வொரு மாதமும் வரியை உங்கள் சம்பளத்தில் பிடித்துக்கொள்ளும். மேலும் நிறுவனங்கள் தான் ஊழியரிடம் வருமான வரி விதிப்பு முறையின் தேர்வை கட்டு அறிய வேண்டும், நிர்வாகம் இதை செய்யாத பட்சத்தில் ஊழியர்களே நேரடியாக நிர்வாகத்திடம் கேட்க வேண்டும். இல்லையெனில் உங்களுடைய சம்பளம் தான் பாதிக்கும்.
மாத சம்பளக்காரர்கள் பழைய வருமான வதி விதிப்பு முறை மற்றும் புதிய வருமான வதி விதிப்பு முறையின் கீழ் அதிகப்படியான வரி பயன்கள் உள்ளது. ஆனால் இது ஒவ்வொருவரின் சேமிப்பு, முதலீடுகளுக்கு அடிப்படையில் மாறும். இந்த பட்ஜெட் அறிக்கையில் பல முக்கிய மாற்றங்களை பட்ஜெட் அறிவிப்பில் கொண்டு வரப்பட்டது. இதில் முக்கியமாக புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் 50000 ரூபாய் மதிப்பிலான standard deduction அறிவிக்கப்பட்டது.
பழைய வருமான வரி விதிப்பு முறை :
வருடாந்திர வருமானம் 2.5 லட்சம் வரையில் எவ்விதமான வரியும் இல்லை.
ரூ. 2,50,001 முதல் ரூ 5,00,000 வரையிலான தொகைக்கு - 5% வரி விதிக்கப்படும். இந்த 5 சதவீத வரி மொத்த வருமானம் ரூ.2,50,000 கழித்த பின்பு கணக்கிடப்படும்.
ரூ. 5,00,001 முதல் 10,00,000 வரை வரையிலான வருடாந்திர வருமானத்திற்கு - ரூ. 12,500 + 20% வரி . இந்த 20 சதவீத வரி மொத்த வருமானம் ரூ.5,00,000 கழித்த பின்பு கணக்கிடப்படும்.
ரூ. 10,00,001 மற்றும் அதற்கு மேல் வருடாந்திர வருமானத்திற்கு - ரூ. 1,12,500 + 30% வரி. இந்த 30 சதவீத வரி மொத்த வருமானம் ரூ.10,00,000 கழித்த பின்பு கணக்கிடப்படும்.

பழைய வருமான வரி விதிப்பு முறை :
ரூ. 3,00,000 - எவ்விதமான வரியும் இல்லை
ரூ. 3.00,000 முதல் ரூ. 6,00,000 - 3,00,000 ரூபாய்க்கு மேல் வருமானத்தில் 5% வரி
ரூ. 6,00,000 முதல் ரூ. 900,000 - ரூ. 15,000 + 6,00,000 ரூபாய்க்கு மேல் வருமானத்தில் 10% வரி
ரூ. 9,00,000 முதல் ரூ. 12,00,000 - ரூ. 45,000 + 9,00,000 ரூபாய்க்கு மேல் வருமானத்தில் 15% வரி
ரூ. 12,00,000 முதல் ரூ. 1500,000 - ரூ. 90,000 + 12,00,000 ரூபாய்க்கு மேல் வருமானத்தில் 20% வரி
மேல் ரூ. 15,00,000 வருடாந்திர வருமானத்திற்கு - ரூ. 150,000 + ரூ. 15,00,000 ரூபாய்க்கு மேல் வருமானத்தில் 30% வரி


Click it and Unblock the Notifications