இந்தியாவில் பாமாயில் பயன்பாடு சமையலில் அதிகரித்து வருகிறது. காரணம் அதன் விலை மிகவும் குறைவாகும். சிறிய ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், தெருவோர கடைகளில் முழுக்க முழுக்க பாமாயில்தான் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் அதன் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியா பாமாயில் இறக்குமதியை நம்பிதான் இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றுவதற்கு தெலுங்கானா மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தெலுங்கானா மாநில கூட்டுறவு எண்ணெய் வித்துகள் விவசாயிகள் அமைப்பு, அஸ்வாராபேட்டை-யில் தினமும் 100 டன் பாமாயிலை உற்பத்தி செய்வதற்கான சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில் பாமாயில் விவசாயிகள் மத்தியில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது.
கம்மம் மாவட்டத்தில் உள்ள அஸ்வாராபேட்டையில் இந்த சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. அஸ்வாராபேட்டை பகுதியில் நிறைய பாமாயில் மரங்கள் விளைகின்றன. 80,000 ஏக்கர் பரப்பில் கம்மம், பத்ராத்ரி கோத்தாகூடம் மாவட்டங்களில் பாமாயில் மரங்கள் சாகுபடி நடக்கிறது.
தெலுங்கானா மாநில கூட்டுறவு எண்ணெய் வித்துகள் விவசாயிகள் அமைப்பு அதிகாரிகள் இதுபற்றி கூறுகையில் அஸ்வாராபேட்டை, தம்மபேட்டை கிராமங்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் டன் பாமாயில் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
எனவே அஸ்வாராபேட்டையில் தினமும் 100 டன் பாமாயில் சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்கவேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. இதற்கு ரூ.100 கோடி தேவைப்படும் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
முந்தைய சந்திரசேகர ராவ் ஆட்சியில் சில அரசியல்வாதிகளின் செல்வாக்கால் அஸ்வாராபேட்டையில் செயல்பட்டு வந்த சுத்திகரிப்பு நிலையங்களை சித்திப்பேட்டைக்கு மாற்றிவிட்டனர். அந்தப் பகுதியில் ஆண்டுக்கு 5 டன் பாமாயில் மட்டுமே உற்பத்தி செய்கிறது. விளைச்சலும் அங்கு குறைவுதான், இப்போது புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு டெண்டர் விடும் நிலையில் உள்ளது.
சித்திப்பேட்டையில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு பதிலாக அதிகளவு பாமாயில் மரங்கள் விளையும் அஸ்வாராபேட்டையில் அமைப்பது தான் விவசாயிகளுக்கு நல்லது என்று வாதிடப்படுகிறது.
அஸ்வாராபேட்டையைச் சேர்ந்த பாமாயில் விவசாயி கே ஸ்ரீனிவாஸ் இதுபற்றி கூறுகையில் தற்போது காங்கிரஸ் ஆட்சி அமையவிருப்பதால் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகக் கூறினார்.
சித்திப்பேட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்றும் அது பொருத்தமற்ற காரியம் என்றும் சம்மேளனத்தின் தலைவர்கள் மகேஸ்வர ரெட்டி, புல்லையா, அடப்பா லச்சையா தோரா ஆகியோர் கூறுகின்றனர்.
அஸ்வாராபேட்டையில் இருந்து தம்மபேட்டை ஆலைகளுக்கு மூலப் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்கின்றனர். இதுகுறித்து அஸ்வாராபேட்டையின் புதிய எம்எல்ஏ ஜாரே அதிநாராயணா முதல்வர ரேவந்த் ரெட்டியை சந்தித்து வலியுறுத்தப் போவதாகவும் அதற்கு விவசாயத் துறை அமைச்சர் தும்மாலா நாகேஸ்வர ராவும் ஆதரவு தந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அஸ்வாராபேட்டை, தம்மபேட்டையில் உள்ள இரண்டு ஆலைகளில் மட்டும் 3 லட்சம் டன் பாமாயில் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications