75 ரூபாய் நாணயத்தை பெறுவது எப்படி..? ஏகப்பட்ட டிமாண்ட்..!

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த நாணயத்தை எங்கு எப்படி பெறுவது..? இதேபோல் 75 ரூபாய் நாணயத்தை இதற்கு முன்பே ஒரு முறை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அது எதற்காக..? எப்போது..?

இந்திய அரசு 75 ரூபாய் நாணயம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2020 அக்டோபரில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது முறையாக 75 ரூபாய் நாணயத்தை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக வெளியிடப்படுகிறது.

75 ரூபாய் நாணயத்தை பெறுவது எப்படி..? ஏகப்பட்ட டிமாண்ட்..!

ஒரு சிறப்பு நிகழ்வு, நபர் அல்லது நினைவுச் சின்னத்தை கௌரவிப்பதற்காக ஒரு நினைவாக நாணயத்தை அவ்வப்போது நிகழ்வை பொருத்து மத்திய அரசு தயாரித்து வெளியிடும். இந்த நாணயங்கள் அதிகளவில் தயாரிக்கப்படாது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்படும்.

இப்படி தயாரிக்கப்படும் நாணயங்கள் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டு இருக்கும். இப்படி இந்தியாவில் 100 ரூபாய் நாணயம் உட்பட பல நாணயங்களை சிறப்பு வடிவமைப்பு உடன் நினைவு நாணயங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரி இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தை எவ்வாறு பெறுவது? என்பது பெற முடியும்..?

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டு உயர் மதிப்புடைய நினைவு நாணயங்கள் பெரும்பாலும் மக்களின் தினசரி புழக்கத்தில் பயன்படுத்தும் நாணயமாக இல்லாமல் சேகரிக்கக் கூடியதாக வெளியிடப்படுகின்றன. இதுவே குறைந்த விலையுள்ள உலோகங்களை கொண்ட நாணயங்கள் வெளியிட்டாலும் அது குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே புழக்கத்தில் இருக்கும்.

75 ரூபாய் நாணயத்தை பெறுவது எப்படி..? ஏகப்பட்ட டிமாண்ட்..!

இந்த நாணயங்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள நான்கு இந்திய அரசாங்க அச்சகங்களில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக அதிக மதிப்புள்ள நாணயங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்த நாணயத்தை அச்சடித்த அச்சகத்தின் இணையத்தில் நேரடியாக ஆர்டர் செய்ய வேண்டும்.

இதை தவிர நாணய விற்பனையாளர்கள், அரிய நாணயங்களை விற்பனை செய்யும் டீலர்களிடமும் இந்த நாணயத்தை வாங்க முடியும். இந்த சிறப்பு நாணயங்களை நேரடியாக ஆர்பிஐ அச்சகங்களில் வாங்கும் அரசு நிர்ணயம் செய்யும் விலையிலேயே பெறலாம். ஆனால் வெளியில் வாங்கினால் டிமாண்ட்-க்கு ஏற்ப விலையும் அதிகமாகும்.

இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயங்களை நேரடியாகப் பெற கொல்கத்தா மின்ட், மும்பை மின்ட் மற்றும் ஹைதராபாத் மின்ட் ஆகியவற்றின் இணையதளங்களை காணலாம். நினைவு நாணயங்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் பெரும்பாலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கும். நாணயத்தை வாங்க, மக்கள் நேரடியாக அச்சகத்திற்கு செல்லலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+