தினசரி ரூ,150 முதலீடு.. வயதான காலத்தில் ரூ.1 கோடிக்கு அதிபதியாகலாம்.. மாத பென்ஷனும் உண்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பலரின் மனதிலும் இருக்கும் ஒரு விஷயம், இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும், முதுமை காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஓடி ஆடி வேலை செய்து வந்தாலும், முதுமை காலத்தில் ஆவது சற்று நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணம்.

 

குழந்தைகளின் கல்வி, திருமணம் என பலவற்றையும் பற்றி யோசிக்கும் நாம், நம் ஓய்வுகாலத்தினை பற்றி யோசிப்பதில்லை.

இறுதி வர்த்தக நாளிலும் சரிவில் முடிந்த இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 52,100 மேல் முடிவு..!

ஆனால் ஒவ்வொருவரும் தங்களது ஒய்வுகாலத்திற்கான முதலீட்டினை பற்றியும் யோசிக்க வேண்டும். அதுவும் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய 100 முறை யோசிக்க வேண்டும் எனில், முதிர்வு காலத்திற்காக முதலீடு செய்வதை 1000 முறை யோசிக்க வேண்டும்.

இது புதிய ஒய்வூதிய திட்டம்

இது புதிய ஒய்வூதிய திட்டம்

அப்படி ஒரு ஆபத்து குறைவான ஒரு முதலீட்டு திட்டத்தினை பற்றித் தான் நாம் இன்று பார்க்கவிருக்கிறோம். இது என்பிஎஸ் எனப்படும் புதிய ஒய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தின் சிறப்பம்சமே அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள், ஒய்வூதியம் இல்லாதவர்கள், தங்கள் வயதான காலத்திற்காக இதில் முதலீடு செய்யலாம் என்பது தான்.

தினசரி ரூ.150 முதலீடு

தினசரி ரூ.150 முதலீடு

இந்த திட்டத்தில் தினசரி 150 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் நீங்கள் ஓய்வுபெறும்போது இந்த திட்டத்தில் 1 கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கலாம். இது மிக எளிதான ரிஸ்க் குறைந்த ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டு திட்டம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

எதில் முதலீடு செய்யப்படுகிறது?
 

எதில் முதலீடு செய்யப்படுகிறது?

இந்த புதிய ஒய்வூதிய திட்டம் சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியம் அடிப்படையிலான முதலீட்டு திட்டமாகும். இந்த முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்படும் நிதியானது ஈக்விட்டி, கடன் பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும்.

எதில்? எவ்வளவு?

எதில்? எவ்வளவு?

இந்த திட்டத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சமே, இந்த திட்டத்தில் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானிக்கலாம் என்பது தான். வழக்கமாக 75% வரையில் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். இதனால் இந்த திட்டமானது அரசின் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இபிஎஃப்பினை சற்று வருவாய் அதிகம் பெற வாய்ப்புகள் அதிகம்.

கோடி ரூபாய்க்கு அதிபதி

கோடி ரூபாய்க்கு அதிபதி

உதாரணத்திற்கு உங்களுக்கு 25 வயது என வைத்துக் கொண்டால், நீங்கள் தினசரி 150 ரூபாய் வீதம், மாதம் 4500 ரூபாய் முதலீடு செய்வீர்கள். வருடத்திற்கு சுமார் 8% லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால், 60 வயதில் கோடி ரூபாய் பென்ஷாக பெற முடியும்.

வட்டி வருமானம்

வட்டி வருமானம்

இந்த திட்டத்தில் மொத்த முதலீடு என்பது 18,90,000 ரூபாயாகும். நீங்கள் பெறும் வட்டி வருமானம் 83.67 லட்சம் ரூபாயாகும். ஆக மொத்தம் உங்களுக்கு கிடைக்கும் இறுதி பென்ஷன் தொகை 1.02 கோடி ரூபாயாகும். இது வரி சலுகை 5.67 லட்சம் ரூபாயாகும்.

பென்ஷன் எவ்வளவு?

பென்ஷன் எவ்வளவு?

எனினும் உங்கள் பென்ஷனை முழுவதும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் 60% மட்டுமே திரும்ப பெற முடியும். 40% நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாத மாதம் உங்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும். ஆக வட்டி விகிதம் 8% என வைத்துக் கொண்டால் மாத மாதம் 27,353 ரூபாய் வட்டியாக பெறுவீர்கள். இதே 60% தொகையாக 61.54 லட்சம் ரூபாயினை தொகையாக எடுத்துக் கொள்ளலாம்.

முன்னதாக திட்டமிடுங்கள்

முன்னதாக திட்டமிடுங்கள்

ஆக நீங்கள் இளம் வயதிலேயே சேமிக்க தொடங்கினால் பெரும் தொகையை பெற முடியும். இதே உங்கள் வயதின் அடிப்படையில் இந்த தொகைகள் மாறுபடலாம். ஆக முடிந்த மட்டில் முன்னதாக திட்டமிட்டால், நாம் கணிசமான தொகையை நமது ஓய்வுகாலத்தில் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New Pension System: invest Rs.150 a day, get Rs.1 crore on your retirement, along with Rs.27,000 above pension

NPS updates.. New Pension System: invest Rs.150 a day, get Rs.1 crore on your retirement, along with Rs.27,000 above pension
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X