இந்தியாவில் 2025 ஆம் நிதியாண்டு முதல் புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி பிளாஸ்டிக்கை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பிராண்ட் உரிமையாளர்கள் இனி கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு இதில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

உலகளவில் அதிகமாக பிளாஸ்டிக் உற்பத்தி செய்து பயன்படுத்தும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. எனவே பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக இந்தியாவில் கொண்டு வரப்படும் எந்த ஒரு மாற்றமும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என்ற விதியானது, FMCG நிறுவனங்களை பெரிதளவில் பாதிக்கும் என கோடக்
ஈக்விட்டீஸ் (Kotak Institutional Equities) நிறுவனம் கூறியுள்ளது.
அரசின் பிளாஸ்டிக் மேலாண்மை விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள கோடக் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம்," இந்தியாவில் நுகர்வோரிடம் நேரடியாக பொருட்களை கொண்டு சேர்க்கும் நிறுவனங்கள் தங்களது வருவாயில் சராசரியாக 5 முதல் 8 சதவிகிதத்தை பேக்கேஜிங்கிற்காகவே செலவிடுகின்றன. இதனால் பிரிட்டானியா, கோல்கேட் மற்றும் நெஸ்லே ஆகியவை மிகவும் பாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள், ஐடிசி, ஜோதி லேப்ஸ் மற்றும் வருண் பீவெரேஜ் ஆகியவை இந்த புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதியில் மிகக் குறைவான தாக்கத்தையே எதிர்கொள்ள இருக்கின்றன என இந்த தரகு நிறுவனம் கூறுகிறது.
பிளாஸ்டிக் , வெளிப்படையான பிளாஸ்டிக், உணவு தரத்திற்கான பிளாஸ்டிக். நெகிழ்வு தன்மை கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பல அடுக்கு பிளாஸ்டிக் என ஐந்து வகைகளில் பிளாஸ்டிக்கை பிரித்து பகுப்பாய்வு செய்ததாக கோடக் தரகு நிறுவனம் கூறுகிறது.
பிளாஸ்டிக் பேக்கேஜூகளை குறைப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டிய கட்டாயத்திற்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டு விட்டன. நெஸ்ட்லே இந்தியா தங்களது அனைத்து விளம்பர பொருட்களுக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை 2020 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்திவிட்டது என்றும் பேக்கேஜிங்கில் முக்கிய கவனம் செலுத்துவதாகவும் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக்கின் அளவை குறைப்பது அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் முயற்சிகளை தாங்கள் எப்போது தொடங்கி விட்டோம் என நெஸ்ட்லே கூறியுள்ளது.எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பேக்கேஜிங் பொருளை நோக்கி தங்களது நிறுவனம் படிப்படியாக நகர்ந்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசின் புதிய பிளாஸ்டிக் மேலாண்மை திட்டத்தின் மூலம் பலனடைய போவது பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலில் ஈடுபட்டுள்ள கணேசா எக்கோஸ்பியர், ஈபிஎல், யுஃபிளெக்ஸ் மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்கள் தான் என தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications