அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இரண்டாவது பதவிக் காலத்தில் மிக கடுமையான அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறார். சமீப வாரங்களில் வெளியான பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள், டிரம்ப் அதிபராக செயல்படும் விதத்தில் அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருவதை வெளிப்படையாக காட்டுகின்றன.
அரசியல் வல்லுநர்கள், இந்த நிலை டிரம்ப்பின் அரசியல் பலத்தில் விரிசல் விழுவதை குறிப்பதாக எச்சரித்துள்ளனர். பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் தரவுகள், நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் டிரம்ப் பலவீனமான நிலையில் இருப்பதை காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதி நடைபெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் கலந்து கொண்ட 1,001 அமெரிக்க வாக்காளர்களில் 76% பேர், டிரம்ப் நாட்டின் பொருளாதாரத்தை கையாளும் விதத்தில் எதிர்மறையான மதிப்பீட்டையே வழங்கியுள்ளனர். முக்கால்வாசிக்கும் அதிகமான வாக்காளர்கள் டிரம்ப்பை எதிர்மறையாக மதிப்பிட்டது மட்டுமின்றி, முன்னாள் அதிபர் ஜோ பைடனை விட பொருளாதார விவகாரத்தில் டிரம்ப் மோசமானவராக கருதப்படுகிறார். பைடனுக்கு 70% பேர் எதிர்மறை மதிப்பெண் வழங்கிய நிலையில், மோசமான பொருளாதார நிலைக்கு டிரம்ப்பே முக்கிய காரணம் என்று வாக்காளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிர்வாக செயல்பாட்டிலும் சரிவு : அசோசியேட்டட் பிரஸ் மற்றும் NORC நடத்திய மற்றொரு ஆய்வின் முடிவுகளும் டிரம்ப்புக்கு பின்னடைவையே தந்துள்ளன. இந்த ஆய்வில், டிரம்ப் நாட்டின் மத்திய அரசாங்கத்தை நிர்வகிக்கும் விதத்தை வெறும் 33% அமெரிக்கர்கள் மட்டுமே அங்கீகரிப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருந்த 43% அங்கீகாரத்தை விட கணிசமாக குறைந்துள்ளது. மேலும், நவம்பர் 18ஆம் தேதியன்று வெளியான ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் கருத்துக்கணிப்பில், டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார மதிப்பீடு 38% ஆக குறைந்துள்ளது. அரசாங்க சிக்கல்கள், தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு மற்றும் சமீபத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சர்ச்சைகள் ஆகியவை இந்த கடும் சரிவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. இது அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் டிரம்ப் கண்ட மிக குறைந்த அங்கீகார மதிப்பீடு ஆகும்.
நடுநிலை வாக்காளர்களிடம் அதிருப்தி அதிகரிப்பு : புகழ்பெற்ற அமெரிக்க கருத்துக் கணிப்பு நிபுணரான நேட் சில்வர் (Nate Silver) தொகுத்த சமீபத்திய தரவுகளின்படி, டிரம்ப்பின் சராசரி நிகர அங்கீகார மதிப்பீடு 14 ஆக குறைந்துள்ளது. அதாவது, 42% பேர் மட்டுமே டிரம்ப்பை அங்கீகரிக்க, 56% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எமர்சன் கல்லூரி நடத்திய ஆய்வில், டிரம்ப்பின் அங்கீகார மதிப்பீடு ஒரே மாதத்தில் 45%-இல் இருந்து 41% ஆக குறைந்துள்ளது. முக்கியமாக, கட்சி சாராத நடுநிலை வாக்காளர்களிடம் டிரம்ப்பின் மீதான அதிருப்தி 44%-இல் இருந்து 51% ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், முக்கிய வாக்காளர் குழுக்களில் ஒன்றான ஹிஸ்பானிக் மக்களிடமும் அதிருப்தி 39%-இல் இருந்து 54% ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் அமெரிக்க வாக்காளர்கள் தங்கள் அதிபரை ஆதரிப்பதில் இருந்து விலகி செல்வதை தெளிவாக காட்டுகின்றன. இது டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

அமெரிக்காவில் ஈரானின் Sleeper cell-களா? பாரசீக மொழியில் பறந்த மெசேஜ்.. உளவுத்துறையினர் அதிர்ச்சி..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?



Click it and Unblock the Notifications