ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஹவுஸிங் பைனான்ஸ் கம்பெனி மற்றும் NBFC அதாவது வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்கள், ரீபேமெண்ட் முறைகள் ஆகியவற்றுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சிறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் பிக்சட் டெபாசிட்களுக்கான நாமினியை தீர்மானிப்பதற்கான விதிமுறைகள், முதிர்வு காலத்திற்கு முன்பே தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் முதிர்வு தேதியை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் விதிமுறைகள் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

NBFC வங்கிகளில் வழங்கப்படும் டெபாசிட்களுக்கான திருத்தப்பட்ட RBI விதிமுறைகள்:
நாமினி: டெபாசிட் செய்யும் நபர், தனது வைப்பு நிதிக்கான நாமினியை நியமித்தல், ரத்து செய்தல் அல்லது நாமினியை மாற்றுதல் ஆகியவற்றிற்கு உரிய வழிமுறைகளை படிவத்தை சரியாக நிரப்பி சமர்ப்பித்து அதை ஏற்பது தொடர்பான ஒப்புகை சீட்டு கொடுப்பது போன்ற வழிமுறையை NBFC-கள் உருவாக்க பரிந்துரைக்கப்படுகிறது.
பாஸ்புக்கில் நாமினியின் பெயர்: வாடிக்கையாளர் ஒப்புதல் அளித்தால், NBFC கள் பாஸ்புக்குகள் அல்லது ரசீதுகளில் ""நாமினேஷன் ரிஜிஸ்டர்டு" என்ற குறியீட்டையும், நாமினியின் பெயரையும் பதிவு செய்யும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.
முன்கூட்டியே பணம் செலுத்தல்: சிறிய அளவிலான டெபாசிட்களுக்கு, தனிநபரின் வேண்டுகோளுக்கு இணங்க, டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத முதிர்வு காலத்திற்குள் நிதி தேவைப்படுமாயின், டெபாசிட் தொகையை முழுமையாக வட்டி இல்லாமல் முதிர்வு காலத்திற்கு முன்பே செலுத்தவும் விதிமுறைகள் கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நோய்கள்: டெபாசிட் செய்தவருக்கு நோய் இருக்கும் சமயங்களில், டெபாசிட் தொகையின் 100% தொகையும், டெபாசிட் செய்தவரின் வேண்டுகோளின்படி, வட்டி இல்லாமல் முன்கூட்டியே செலுத்தப்படும். இந்த விதிகளின்படி தனிநபர் டெபாசிட் செய்த மூன்று மாதங்களுக்கு முன்பே தங்களுடைய டெபாசிட் தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான உரிமை இல்லாத நிலையிலும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி தொகை முதிர்வு காலம் முடிந்த பின்பு அளிக்கப்படும்.
டெபாசிட் தொகை முதிர்வு குறித்த அறிவிப்பு: முன்னதாக, NBFCகள் டெபாசிட் தொகையின் முதிர்வு தேதியை குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பே டெபாசிட்தாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த இரண்டு மாத காலத்தை 14 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, NBFC வங்கியில் டெபாசிட் செய்பவருக்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக டெபாசிட் முதிர்வு தேதியை அறிவிக்க வேண்டும்.
மேலும் இந்த விதிமுறைகள் அனைத்தும் வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications