இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வாடகை சந்தையில் அதிக ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு புதிய வாடகை ஒப்பந்த விதிகள் 2025-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாதிரி குத்தகை சட்டம் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகளை அடிப்படையாக கொண்ட இந்தச் சீர்திருத்தங்கள், வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருக்கும் பயன்படும் ஒரு பொதுவான நிலையான அமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
ஒப்பந்தப் பதிவு கட்டாயம் : புதிய விதிகளின் மிக முக்கியமான மாற்றம் என்னவென்றால், இனிமேல் ஒவ்வொரு வாடகை ஒப்பந்தமும் கையெழுத்திட்ட இரண்டு மாதங்களுக்குள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறையை மாநில சொத்துப் பதிவு இணையதளங்கள் மூலமாகவோ அல்லது உள்ளூர் பதிவாளர் அலுவலகங்கள் மூலமாகவோ முடிக்கலாம். இந்த காலக்கெடுவுக்குள் ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தவறினால், ரூ.5,000 அபராதம் செலுத்த நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடகைதாரர்களுக்கான முக்கிய விதிகள் : இந்த சட்டத்தில் வாடகைதாரர்களுக்குச் சாதகமான பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பணம் (Deposit), வாடகை உயர்வு மற்றும் வெளியேற்றம் குறித்த விதிகள் எளிமையாக்கப்பட்டு, தெளிவாகப் புரியும்படி மாற்றப்பட்டுள்ளன.
அதாவது, ஒப்பந்தம் செய்த இரண்டு மாதங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். குடியிருப்பு வீடுகளுக்கு அதிகபட்சமாக இரண்டு மாத வாடகை தொகை மட்டுமே முன்பணமாக வசூலிக்க முடியும். வணிக ரீதியிலான சொத்துகளுக்கு இது 6 மாத வாடகை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாடகை உயர்த்துவது தொடர்பான விதிகள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும்.
மேலும், வாடகைதாரர்களை திடீரென வெளியேறச் சொல்ல முடியாது. வெளியேற்றுவதற்குச் சட்டரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். அதேபோல், சண்டைகளை தீர்க்க சிறப்பு வாடகை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் இவை 60 நாட்களுக்குள் முடிவுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கான பலன்கள் : வாடகை வருமானத்திற்கான TDS விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வாடகை வருமானம் இனி 'வீட்டுச் சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம்' என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்படும். இது வரி தாக்கல் செய்யும் நடைமுறையை எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் வாடகைதாரர் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை வாடகை செலுத்தத் தவறினால், அவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வசதியாக தீர்ப்பாயத்தை நாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாடகையை கட்டுப்படியாக கூடிய அளவில் வைத்திருக்கும் அல்லது ஆற்றல் திறன் மேம்பாட்டுச் சீரமைப்புகளைச் செய்யும் உரிமையாளர்களுக்கு சில வரி சலுகைகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
ஒப்பந்தத்தை பதிவு செய்வது எப்படி..?: புதிய விதிகள் அமலுக்கு வரும்போது, டிஜிட்டல் ஆவணப் பதிவு பொதுவானதாக மாறும். வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இருவரும் தங்கள் அடையாள சான்றுகளைப் பதிவேற்றி, வாடகை மற்றும் சொத்து விவரங்களை உள்ளிட்டு, மின்னணு முறையில் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய முடியும். இந்த சட்டம் அமலாகும் போது, வாடகை சந்தை வெளிப்படையானதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் மாறும் என்று நம்பப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications