2024-ஆம் ஆண்டு முடிவதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. 2025-ஆம் ஆண்டின் புத்தாண்டை வரவேற்க மக்கள் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சில புதிய விதிகள் அமலுக்கு வரும். அந்த வகையில் 2025-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதியும் சில விதிகள் மற்றும் முக்கிய மாற்றங்கள் வரவுள்ளன. LPG விலையிலிருந்து EPFO வரையிலான விதிகள் இதில் அடங்கும். ஜனவரி 1-ஆம் தேதி முதல் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி விலையை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மாற்றியமைக்கும். கடந்த சில நாட்களாக 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் 14 கிலோ எடையுள்ள வீட்டு சிலிண்டரின் விலை நீண்ட காலமாக நிலையாக இருந்த வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் இந்த முறையும் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PF கணக்கு: 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏடிஎம் இயந்திரங்களில் பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை EPFO அமைப்பு செயல்படுத்தவுள்ளது. இதற்கான பணிகளை தற்போது EPFO அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதற்காக EPFO உறுப்பினர்களுக்கு ஒரு பிரத்தியேக ஏடிஎம் கார்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஃபீச்சர் போன்களுக்கான புதிய அம்சம்: சமீபத்தில், ரிசர்வ் வங்கி ஃபீச்சர் போன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டது. இனிமேல் UPI 123Pay-ஐப் பயன்படுத்தி ரூ.10,000 வரை பணம் செலுத்தலாம். இந்த வசதி ஜனவரி 1, 2025 முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த வரம்பு ரூ.5,000-ஆக இருந்தது.
அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்: அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அமேசான் நிறுவனத்தின் புதிய விதிகளின்படி பிரைம் வீடியோவை பெற்றுள்ள ஒரு சப்ஸ்கிரைபர் 5 டிவைஸ்களில் மட்டுமே கணக்கை பயன்படுத்த முடியும். இதில் 2 டிவிகள் உட்பட மீதமுள்ள 3 சாதனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications