கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது பல கோடிக்கணக்கான மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
அந்த வகையில் அலுவலகம் சென்று பணியாற்றும் பணியாளர்களை கொரோனா வைரஸ் பாதிப்பு Work from Home என்ற முறையால் தலைகீழாக மாற்றிவிட்டது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக Work from Home என்ற முறை அமல்படுத்தப்பட்ட போது இது கிட்டத்தட்ட நிரந்தரமாக்கப்படும் என்று ஊழியர்களும் சரி, நிறுவனத்தின் உரிமையாளர்களும் சரி எதிர்பார்க்கவே இல்லை.
Work from Home
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு குறைந்து மீண்டும் பணியாளர்கள் அலுவலகம் சென்று வேலை பார்க்கலாம் என்ற நிலை வந்தாலும், அலுவலகம் சென்று வேலை பார்க்கும் மனநிலையில் பெரும்பாலான ஊழியர்கள் இல்லை என்பதுதான் உண்மை நிலையாக உள்ளது. ஒரு சில ஊழியர்கள் மட்டும் பகுதி நேரம் அலுவலகம், பகுதி நேரம் வீட்டிலிருந்து பணி என்ற ஹைப்ரிட் முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
அனுமதி வாங்க வேண்டும்
இந்த நிலையில் மத்திய அரசு Work from Home பணியாளர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களுக்கு Work from Home வசதியை அனுமதிக்கலாம் என்றும் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க ஒரு நிறுவனம் விரும்பினால் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக பட்டியலிட்டு அனுமதி வாங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
ஒரு ஆண்டு மட்டுமே நீட்டிப்பு
மேலும் வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சட்டத்திட்டத்தின்படி வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் காலத்தை ஒரு ஆண்டாக நீடிக்க அனுமதிக்கப்படும் என்றும் அதற்கு மேலும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் ஆணையர் அனுமதியுடன் இன்னொரு ஆண்டுக்கு அல்லது 90 நாட்களுக்கு நீடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேவையான வசதிகள்
மேலும் வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் இன்டர்நெட் வசதி, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன், சிம்கார்டு போன்ற வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அலுவலகம் சார்ந்த ஏதாவது உபகரணத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டுமென்றாலும் நிர்வாகம் அந்த ஊழியருக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே விதி
இந்த புதிய சட்டம் நிரந்தர ஊழியர்களுக்கு மட்டுமின்றி ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2006ஆம் ஆண்டின் விதியில் புதிதாக விதி எண் 43A சேர்க்கப்பட்டு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் இனி நாடு முழுவதும் ஒரே மாதிரியான 'வீட்டிலிருந்து வேலை செய்யும்' விதிகள் அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செலவு குறைவு
ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் மின்சார கட்டணம், இன்டர்நெட் கட்டணம், வாடகை கட்டணம் ஆகியவை வீட்டில் இருந்து பணிபுரியும் முறையால் செலவுகள் குறைந்துள்ளதாக கருதியுள்ள நிலையில் தற்போது இந்த புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications