மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) டிசம்பர் 1, 2023 முதல் புதிய சிம் கார்ட் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. 2023 ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு சிம் கார்ட் குறித்த விதிகளை அறிவித்தாலும், இதை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, மத்திய அரசு சிம் கார்ட் விற்பனையாளர்களை சரிபார்ப்பை (Verification) கட்டாயப்படுத்தியுள்ளது. இதோடு மொத்தமாக இணைப்புகளை வழங்கும் சேவை ரத்து செய்து பிஸ்னஸ் கனெக்ஷன் என்ற புதிய சேவை முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதனால் எந்தொரு சிம் கார்ட் டீலரும் மொத்தமாக சிம் கார்ட்களை வழங்க முடியாது, முறையாக வர்த்தக நிறுவனங்கள் குறித்த ஆவணங்களை கொடுத்து தான் பிஸ்னஸ் கனெக்ஷன் வாங்க வேண்டும். இந்த முக்கியமான நடவடிக்கை மூலம் ஆன்லைன் நிதியியல் மோசடிகளை தடுக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
மேலும், டெலிகாம் ஆபரேட்டர்கள் டிசம்பர் 1 முதல் தங்களுடைய பிரான்சைசி, பாயின்ட்-ஆஃப்-சேல் (PoS) முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்பதையும் கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் சமூக விரோதிகள் அல்லது தேசவிரோத சக்திகளுக்கு சிம் கார்ட்களை வழங்கி மோசடி செயல்களில் ஈடுபடும் PoS முகவர்களை மொத்தமாக அகற்றும் முயற்சி செய்கிறது மத்திய அரசு.
மத்திய தொலைத்தொடர்புத் துறையின் புதிய திருத்தப்பட்ட விதிகளின் கீழ், PoS முகவர்கள் டெலிகாம் ஆப்ரேட்டர்கள் உடன் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் மூலம் தங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள PoS முகவர்களுக்கு எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் மூலம் தங்களைப் பதிவு செய்ய 12 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் எந்த ஒரு PoS முகவராக இருந்தசாலும் பணிநீக்கம் மற்றும் மூன்று வருட தடை அதாவது பிளாக்லிஸ்ட் எதிர்கொள்வார்கள் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளிப்படையாகக் கூறியுள்ளது.
இதேபோல் ஆதாரை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அச்சிடப்பட்ட ஆதார் கார்டில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக மட்டுமே மக்களின் விவரங்களைக் பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதேபோல் மொபைல் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்களுக்கு ஒரு புதிய வாடிக்கையாளருக்கு அந்த மொபைல் எண் ஒதுக்கப்படாது. கூடுதலாக, புதிய விதிமுறைகள் கீழ் அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் KYC கட்டாயமாக்கப்பட்டு உள்ளது
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications