தமிழ்நாடு அரசு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையவும், மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்புகளையும், தொழிற்வாய்ப்புகளையும் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில், அடுத்தடுத்து சிப்காட், டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் நாகப்பட்டினத்தில் சுமார் 450 ஏக்கரில் பிரம்மாண்ட சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளையில் மாநிலத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாவட்டத்தில் கூடுதலாக சிப்காட் மற்றும் டைடல் பார்க் அமைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு தற்போது அதிகம் கவனிக்கும் பகுதியாகத் திருச்சி உள்ளது.

சமயபுரத்தில் MSME நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற சமீபத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி பகுதியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக மாநில அரசின் திட்டத்தைச் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.
திருச்சி பகுதியில் புதிதாக ஒரு சிப்காட் தொழிற்பூங்காவை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அருண் நேரு அவர்கள் தெரிவித்தார். இந்த புதிய தொழிற்பேட்டை, திருச்சி மாவட்டத்தின் மணச்சநல்லூர்-துறையூர் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர்களிடம் கூறினார்.
MSME துறைக்கான வளர்ச்சிக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் நேரு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள தற்போதைய சிப்காட் தொழிற்பேட்டைகள் முழுமையாகச் செயல்படும் திறனை எட்டியுள்ளன என்றும், தற்போதுள்ள இந்த இடத்தில் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், திருச்சி பகுதியில் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், புதிய மற்றும் பெரிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் புதிய சிப்காட் உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.
மணச்சநல்லூர்-துறையூர் பகுதி, தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்றதாகக் கருதப்படுவதால், புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது, சுமார் 60 ஏக்கர் நிலம் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஒரு சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கக் குறைந்தபட்சம் 100 ஏக்கருக்கு மேல் நிலப்பரப்பு தேவை என்பதால் அருகில் இருக்கும் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தற்போதுள்ள விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு நிலத்தை கையகப்படுத்தும் எனவும் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை போல் திருச்சியும் உற்பத்தி மற்றும் ஐடி சேவை துறை கலவையை கொண்டுள்ளது, ஒருப்பக்கம் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் மாஸ் காட்டினாலும், பல சிறு ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் திருச்சியில் மாஸ் காட்டி வருகிறது. சமீபத்தில் சென்னை, கோயம்புத்தூர்-க்கு அடுத்தப்படியாக திருச்சி மாவட்டத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து வருகிறது.
திருச்சியில் ஏற்கனவே விமான நிலையம், மற்றும் மாநிலத்தின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் சாலை போக்குவரத்து வசதிகள் இருக்கும் காரணத்தால் சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவர்த்து, நகரின் உள்கட்டமைப்பு என அனைத்தும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சாதகமாக உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications