ஸ்டாலின் அரசின் MasterStroke.. 775.75 ஏக்கரில் அடுத்த பிரம்மாண்டம்! மதுரை - சிவகங்கை மக்கள் ஹேப்பி!

தமிழ்நாட்டை 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக செயல்பட்டு வரும் வேளையில், மாநிலம் முழுவதும் புதிய முதலீடுகளை ஈர்த்து, தொழிற்சாலை அமைத்து அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மாநிலத்தில் 15க்கும் அதிகமான இடத்தில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிப்காட் அமைப்பு மாநிலத்தில் அதிகம் வளர்ச்சியடையாத சிவகங்கை மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைத் மேம்படுத்த புதிய தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த ஒரு தொழிற்பூங்கா சிவகங்கை மாவட்டத்தை உற்பத்தி துறையில் தனது பயணத்தை வலிமையாக துவங்க வழிவகை செய்யும்.

ஸ்டாலின் அரசின் MasterStroke.. 775.75 ஏக்கரில் அடுத்த பிரம்மாண்டம்! மதுரை - சிவகங்கை மக்கள் ஹேப்பி!

இப்புதிய சிப்காட் தொழிற்பூங்கா இலுப்பைக்குடி, கிளத்தாரி மற்றும் அரசனூர் கிராமங்களை உள்ளடக்கிய 775.75 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான தொழில் பூங்காவை நிறுவ சிப்காட் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி அம்மாவட்ட மக்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்தி பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட உள்ளது.

இந்த சிப்காட் மதுரை - சிவகங்கை மாவட்டங்களுக்கு மத்தியில் அமைய உள்ள காரணத்தல் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் கணக்காக இரு மாவட்டத்திற்கும் பலன் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே மதுரையில் ELCOT ஐடி பார்க் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், தொழிற்துறைக்கான இந்த புதிய திட்டம் மதுரை - சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும்.

இன்று ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கோயம்புத்தூர் போன்ற அனைத்தும் அப்படி தான் பயணத்தை துவங்கியது. இந்த தொழில் பூங்காவில் சுமார் 36,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகும். இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலத்தவர்களில் இருக்கும் திறமையான தொழிலாளர்களையும் ஈர்க்கும்.

இந்த சிவகங்கை தொழிற்பூங்கா, ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும். மேலும், இப்புதிய சிப்காட் தொழிற்பூங்காவின் வளர்ச்சி லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங் மற்றும் கிடங்கு உள்ளிட்ட துணைத் தொழில்களின் வளர்ச்சியையும் தூண்டும்.

இந்த சிப்காட் தொழிற்பூங்காவை ரூ.342 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் இட தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை ஈடு செய்யவே தமிழ்நாடு அடுத்தடுத்து சிப்காட் தொழிற்பூங்காவை அமைத்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+