தமிழ்நாட்டில் கோயம்புத்தூர்-க்கு அடுத்ததாக வேகமாக வளரும் மாவட்டமாகத் திருச்சி மாறி வருகிறது. இதில் முக்கியமாகச் சென்னை, கோயம்புத்தூர் போலவே திருச்சி மாவட்டமும் உற்பத்தி மற்றும் சேவை துறையில் இணைந்தே வளர்ந்து வருகிறது, இந்த காம்பினேஷன் இம்மாவட்டத்தில் Living cost-ஐ தொடர்ந்து குறைவாக வைக்க வழிவகுக்கிறது.
திருச்சியில் ஏற்கனவே மத்திய அரசு நிறுவனமான BHEL உட்பட பல அரசு நிறுவனங்களும், ஓசூரில் இருப்பது போலவே MSME நிறுவனங்கள் நிறைந்த ஒரு கிளஸ்டராக உள்ளது. இந்த நிலையில் கடந்த 5 வருடத்தில் ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்களின் வருகை அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு ஐடி பார்க் திட்டத்தை அறிவித்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அசத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் திருச்சி மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்றால் மிகையில்லை.
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் பேசிய போது, மத்திய தமிழ்நாட்டை சேர்ந்த நான்கு மாவட்டங்களில் ஐந்து புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, காவிரி டெல்டா மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் வழிவகுத்துள்ளது.
திருச்சியில் ஏற்கனவே தொழில் வளர்ச்சி பெற்ற பகுதியான திருவரம்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் ஒரு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் பாரத ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL), ஆயுத தொழிற்சாலை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான (MSME) உற்பத்தி ஆலைகள் (Fabrication Units) செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்படும் புதிய சிப்காட் திருச்சி மாவட்டத்தின் உற்பத்தித் திறனை பயன்படுத்திக்கொள்ளத் தொழிற்சாலை அமைக்கும். இந்த புதிய சிப்காட் தொழிற்பேட்டை மூலம் ஏற்கனவே இப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கும், புதிதாக வரும் தொழிற்சாலைக்கும் பெரிய அளவில் பலன் அளிக்கும்.
திருச்சிராப்பள்ளியில் ஏற்கனவே மணப்பாறையில் ஒரு தொழிற்பூங்கா இருந்தாலும், திருவரம்பூரில் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த தொழிற்பூங்கா அப்பகுதியை சுற்றியுள்ள தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவரம்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சிப்காட் தொழிற்துறை பூங்கா ரூ.225 கோடி முதலீட்டை ஈர்த்து, 3,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications