ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணங்களின் போது ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும் இந்திய ரயில்வே நிர்வாகம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செயல்முறையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என சமுக வலைத்தளத்தில் பல பதிவுகள் வெளியாகி வந்தன. முன்பதிவு நேர மாற்றம் முதல் பயணிகளுக்கான கட்டுப்பாடு வரையில் புதிய விதிகள் கொண்டு வரப்படுவதாக தகவல் வெளியானது.
அவசர அவசரமாக டிக்கெட் முன்பதிவு செய்வதை எளிதாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்த தகவலை தற்போது இந்திய ரயில்வே துறை வதந்தி என அறிவித்துள்ளது.

சமுகவலைத்தளத்தில் வந்த பதிவு என்ன..?
ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில் ரயில் டிக்கெட் ஏஜென்ட்கள் தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாது. இதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பயணிகள் நியாயமான முறையில் தட்கல் டிக்கெட்களைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விதிமுறை. ஆனால் இது உண்மையில்லை என தெரிவித்துள்ளது IRCTC.
தட்கல் முன்பதிவு நேரங்கள்:
| புக்கிங் கிளாஸ் | முன்னர் இருந்த முன் பதிவு நேரம் | புதிய நேரம் (ஏப்ரல் 15 முதல்) | எப்போது முன்பதிவு செய்ய வேண்டும்? | நன்மைகள் என்ன? |
|---|---|---|---|---|
| ஏசி கிளாஸ்(1A, 2A, 3A, CC) | காலை 10:00 மணி | காலை 11:00 மணி | 1 நாளுக்கு முன் | குறைக்கப்பட்ட காத்திருப்பு நேரம் |
| நான் ஏசி கிளாஸ் (SL, 2S) | காலை 11:00 மணி | பிற்பகல் 12:00 மணி | 1 நாளுக்கு முன் | குறைக்கப்பட்ட காத்திருப்பு நேரம் |
| பிரீமியம் தட்கல் (PT) | காலை 10:00 மணி | காலை 10:30 மணி | 1 நாளுக்கு முன் | குறைக்கப்பட்ட காத்திருப்பு நேரம் |
IRCTC வெளியிட்டுள்ள விளக்கம்:
இதுக்குறித்து IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றன. ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் தற்போது எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை என்று ரயில்வே துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஏஜென்ட்களுக்கான அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களிலும் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?: IRCTC இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் தட்கல் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.
ஸ்டெப் 1: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய www.irctc.co.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது IRCTC ஆப்-ஐ திறக்கவும்.
ஸ்டெப் 2: உங்களுக்கு விருப்பமான க்ளாசை தேர்ந்தெடுக்கவும். ஏசி கிளாஸில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது நான் ஏசி கிளாஸில் பயணம் செய்ய விரும்புகிறீர்களா?என்பதைப் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டெப் 3: அதன் பிறகு தட்கல் கோட்டா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 4: பின்னர் பயணம் செய்பவரின் விவரங்கள் மற்றும் அடையாள ஆவணத்தின் நம்பரையும் வழங்க வேண்டும். இந்த செயல்முறையை முடித்த பின்னர் பணம் செலுத்தி டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்யலாம்.
ஒருவேளை நீங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயனராக இருந்தால் உங்களுடைய விவரங்கள் தானாக நிரப்பப்படும். கட்டண நேரம் முன்னர் இருந்த 3 நிமிடங்களில் இருந்து 5 நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு விரைவான முன்பதிவுக்காக கேப்ட்சா செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் இதற்கு முன்னர் டிக்கெட் முன் பதிவு செய்வதில் இருந்த பிரச்சனையாக பார்க்கப்பட்டது.
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும்போது கண்டிப்பாக அடையாளச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த மாற்றங்கள் குறிப்பாக அவசர பயணங்களுக்கு தட்கலை நம்பியிருப்பவர்களுக்கு எளிமையாக டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications