டைடல் பார்க் வெறும் ஐடி வேலைவாய்ப்புகளை மட்டும் அல்லாமல் ஒரு பகுதியில் சரித்திரத்தை மாற்றும் வல்லமை கொண்டது என்றால் மிகையில்லை. தனிநபர் வருமானத்தில் துவங்கி வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம் என அனைத்திலும் வளர்ச்சி அடையும் வாய்ப்பை பெற உள்ளது.
இதே மேஜிக் தான் கடந்த சில வருடத்திற்கு முன்பு திருச்சியில் நடந்தது, சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்தது. தற்போது தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு உள்ள நியோ டைடல் பார்கில் பணியாற்றும் ஐடி ஊழியர்களின் அரம்ப சம்பளம் 30000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது தனிநபர் வருமானத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த பானியில் அடுத்து கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஐடி பூங்காக்களை அமைக்க முக்கியமான அமைச்சர்களால் முதல்வர் முக ஸ்டாலின்-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
கரூர் ஐடி பூங்கா: கரூர் மாவட்டத்தில் ஐடி பூங்கா அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி நிறைவு நிலையை எட்டியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் டைடல் மினி பூங்கா அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் கரூர் மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்.
புதுக்கோட்டை ஐடி பூங்கா: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடி பூங்கா அமைக்க, மக்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தலைமையில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஐடி பூங்காக்கள் அமையுமாயின், அது அந்தந்த மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, அந்த மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்லும் அவசியம் குறையும். மேலும், இது அந்த மாவட்டத்திற்கு முதலீட்டையும் ஈர்க்கும்.
இதேவேளையில் 2023ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டபடி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து ஐடி பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications