தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரம் கொண்ட மாநிமாக மாற்ற வேண்டும் என் இலக்கை அடிப்படையாக கொண்டு முக ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம், வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடுகள், கட்டமைப்புகள் மேம்பாடு என அனைத்து பிரிவுகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 2வது முழு பட்ஜெட் அறிக்கையை இன்று நிதியமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்க முக்கிய பங்காற்றும் ஐடி துறையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என் இலக்கை அடிப்படையாக கொண்டு முக ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம், வேலைவாய்ப்பு, கல்வி, முதலீடுகள், கட்டமைப்புகள் மேம்பாடு என அனைத்து பிரிவுகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சென்னை டைடல் பார்க்
சென்னையில் முதன் முறையாக 2000 ஆம் ஆண்டில், TIDEL பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று பட்ஜெட் தாக்கல் செய்த போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ஐடி சேவை துறை
தகவல் தொழில்நுட்பப் துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில்,
ஏழு மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் (Neo-Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நியோ-டைடல் பூங்கா என்றால் சிறிய அளவிலான தொழிற்பூங்கா.
7 மாவட்டத்தில் Neo-Tidel Parks
தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் ஏற்கனவே Neo-Tidel Parks அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் இதன் நீட்சியாக இன்றைய பட்ஜெட் அறிக்கையில் ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுரடியில் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டு
ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டத்தில் அமைக்கப்படும் நியோ டைடல் பார்க் மூலம் சிறிய நகரங்களுக்கு படையெடுக்கும் பெரிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை
இது மட்டும் அல்லாமல் உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய HUB ஆக நிலைநாட்டுவதற்கும், அதிகரித்து வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில்,"தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city)" தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications