வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே பெரும்பாலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு குறித்த பேச்சுகள் அடிபடும். பெரும்பாலான ஊழியர்கள் பதவி உயர்வுடன் ஊதிய உயர்வையும் சேர்த்து தான் எதிர்பார்ப்பார்கள்.
பதவி உயர்வு இல்லை என்றால் கூட ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவும். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிய யுக்தியை கையாண்டு வருவது தெரிய வந்துள்ளது.

பதவி உயர்வு உண்டு, ஆனால் அதற்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Dry Promotion என கூறுகின்றனர். அதாவது திறமைக்கு மதிப்பளிப்பதாக கூறி கூடுதல் பொறுப்பு தந்துவிட்டு ஊதியத்தை தராமல் இருப்பது.
பியர்ல் மேயர் (Pearl Meyer) என்ற கன்சல்டண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டில் இது போல 13 % ஊழியர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது அதற்கு ஏற்ப ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது. 2018இல் 8% ஆக இருந்த Dry Promotion தற்போது 13% ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊதிய உயர்வுக்காக ஒதுக்கும் பட்ஜெட்டையும் குறைத்துவிட்டன என 900 நிறுவனங்களில் நடத்திய சர்வே அடிப்படையில் மெர்சர் (Mercer) என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பதவி உயர்வு மட்டும் தந்துவிட்டு ஊதியத்தை உயர்த்தாமல் நிறுவனங்கள் காட்டும் போக்கு ஊழியர்கள் மத்தியில் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளதாம். பதவி உயர்வு என்ற பெயரில் வேலையையும் பொறுப்பையும் அதிகரிக்கின்றனர் என ஊழியர்கள் புலம்புகின்றனர்.
சில நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் அவர்களாகவே வேலையை விட்டு செல்வதற்கான ஒரு யுக்தியாக இதை கையாள்வதாகவும் சொல்லப்படுகிறது. ஊழியர்களை தக்க வைக்க பதவி உயர்வு வழங்குவது போன்ற பிம்பத்தை உண்டாக்குவதாகவும் தெரிகிறது.
ஆனால் நிறுவனங்களின் இந்த யுக்தி நிறுவனத்திற்கு எந்த உதவியையும் செய்ய போவதில்லை என ரெடிட் தளத்தில் ஊழியர்கள் பலர் கூறியுள்ளனர். சம்பள உயர்வு இல்லாத பதவி உயர்வு என்பது promotion அல்ல demotion என தெரிவித்துள்ளனர்.
தொடக்கத்தில் ஊழியர்கள் இதனை தங்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதினாலும் சில நாட்களிலேயே போதிய ஊதியம் கிடைக்காதது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி பணி சூழலையே பாதிக்கும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications