டோல் கட்டண வசூலில் பெரிய மாற்றம் சந்தமில்லாமல் வந்துள்ளது, ஆனால் பலரும் இதை கவனிக்கவில்லை. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், FASTag இல்லாத வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தில் புதிய விதி மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது என அறிவித்தது.
FASTag சரியாக இயங்காத அல்லது FASTag இல்லாத வாகனங்கள் டோல் பிளாசாவில் நுழைந்தால், கட்டணம் செலுத்தும் முறையைப் பொறுத்து இனி அபராதம் மாறுபடும்.

அதாவது UPI மூலம் பணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு அதிகம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். பணமாக செலுத்தினால் இரு மடங்கு கட்டணம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது பெரும்பாலானோர் FASTag இயங்கவில்லை என்றால் 2 மடங்கு டோல் கட்டணத்தை செலுத்துகின்றனர்.
உதாரணமாக, FASTag மூலம் ரூ.100 கட்டணம் என்றால், பணமாக செலுத்தினால் ரூ.200 ஆகவும், UPI மூலம் ரூ.125 செலுத்தினால் போதுமானது. இந்த விதி தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 இன் மூன்றாவது திருத்த விதியாக 2025ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மாற்றம் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை பயன்படுத்தி மக்களிடம் பெறும் பணத்தை நேரடியாக வங்கி கணக்கிற்குள் கொண்டு வரும் முயற்சியாகவும், FASTag பயன்பாடு அதிகரித்தால் டோல் பிளாசாக்களில் நெரிசல் குறையும், வாகனங்களின் இயக்கம் வேகமாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விதி நவம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது, FASTag இல்லாத வாகனங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், பயணிகள் FASTag பெறுவது நல்லது இதேபோல் வெளியூருக்கு செல்லும் போது முன்கூட்டியே செக் செய்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications