யுபிஐ (UPI) மூலம் பணம் பரிமாற்றங்கள் இன்று மிக விரைவாகவும், பரவலாகவும் நடந்து வருகின்றன. பெட்டிக்கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்துகின்றனர். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கூறியது போல, ஒரு செகண்டுக்கு சுமார் 7,000 பரிவர்த்தனைகள் நடக்கின்றன. இதனால், ஒரு நிமிடம் அல்லது ஒரு மணி நேரத்தில் எத்தனை பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எளிதாக கற்பனை செய்யலாம். இதன் காரணமாக, யுபிஐ சேவையில் பல விதமான புதிய விதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.
நீங்கள் UPI மூலம் பண பரிவர்த்தனைகள் செய்வீர்கள் என்றால், ஆகஸ்ட் 1, 2025 முதல் சில புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. உதாரணமாக PhonePe, Google Pay, Paytm போன்றவை, பண பரிமாற்றத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்.

இதில் முக்கியமானவை (உங்கள் வங்கி கணக்கு இருப்பு சரிபார்த்தல், பரிவர்த்தனை நிலையை (transaction status) உறுதி செய்தல், மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் பட்டியல், ஆட்டோமேட்டிக் பணம் செலுத்தும் (auto-pay mandate) சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்)
இந்த புதிய விதிகள், பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாகவும், துல்லியமாகவும் நடத்த உதவும். எனவே, உங்கள் UPI பயன்பாட்டில் இதைப் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும்.
பேலன்ஸ் சரிபார்ப்பு லிமிட் (Balance check limit) : கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் உங்கள் வங்கி பேலன்ஸ் சரிபார்க்கும் முறையில் புதிய விதி அமல் ஆகிறது. ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒவ்வொரு யுபிஐ ஆப்பிலும் 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டும் பேங்க் பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கப்படும். இதனால், ஒரு நாளில் கூகுள் பேயில் 50 முறை, போன்பேயில் 50 முறை என, ஒவ்வொரு ஆப்பிலும் தனித்தனியே 50 முறை பேலன்ஸ் சரிபார்க்க முடியும்.
பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு (Transactions Status Check) :சர்வீஸ் புரொவைடர்கள் அல்லது வங்கிகள் மூலம், ஒரு பரிவர்த்தனையின் நிலையை சரிபார்க்கும் எண்ணிக்கை புதிய விதிகளின் படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி, 2 மணி நேரத்தில் அதிகபட்சம் 3 முறை மட்டும் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்கலாம். இதில், இரண்டு சரிபார்ப்பு முயற்சிகளுக்கிடையில் குறைந்தது 90 நொடிகள் இடைவெளி இருக்க வேண்டும். மேலும், ஒரு பரிவர்த்தனை முடிந்ததும், அதை சரிபார்க்க 45 முதல் 60 நொடிகள் வரை காத்திருந்து பார்க்க வேண்டியது முக்கியம்.
ஆட்டோபேமெண்ட் லிமிட் (Autopay Payments Fixed) : நெட்பிளிக்ஸ், எஸ்ஐபி போன்வற்றில் மாதம் மாதம் ஆட்டோபே மூலம் பணம் செலுத்தும்போது, பணம் கட்டும் நேரம் நன்-பீக் ஹவர்களுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, காலை 10 மணிக்கு முன், மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி பிறகு மட்டுமே பணம் செலுத்த முடியும். இதனால், இந்த நேரங்களுக்குள் மட்டுமே ஆட்டோ டெபிட் மூலம் பணம் செலுத்த முடியும் என்பதைக் கவனிக்க வேண்டும்.
மொபைல் எண் + வங்கிக் கணக்கு (Information on linked accounts) :உங்கள் மொபைல் எண் எந்த வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்களை இப்போது ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications