ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் யுபிஐ பயன்பாடுகள் தொடர்பான சில முக்கியமான விதிகள் மாறவுள்ளது. கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் உள்ள பயனர்களுக்கு இந்த மாற்றங்கள் பொருந்தும். ஒரே நாளில் யுபிஐ மூலம் பலமுறை பணப் பரிமாற்றம் செய்யும் நபர்கள் இந்த புதிய விதியால், அதிகம் பாதிக்கப்படலாம். மீதி தொகையை எப்போதும் சரிபார்க்கும் நபர்களுக்கு Transaction Limit கட்டுப்பாடுகள் இருக்கலாம். UPI AutoPay வசதிக்கான அனுமதி மற்றும் செயல்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் இருக்கும்.
தற்போதைய முறையில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் காரணங்களை NPCI கண்காணிக்கிறது. இதில் மாற்றங்கள் வரலாம். புதிய வங்கி கணக்குகளை UPI-யுடன் இணைக்கும் விதிமுறைகளில் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் சேர்க்கப்படலாம். இந்த மாற்றங்கள் பயனாளர்களின் பாதுகாப்பையும், பரிமாற்ற அனுபவத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

என்னென்ன மாற்றங்கள்..?: UPI மொபைல் செயலிகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 50 முறை மட்டும் மீதி தொகையை (Balance) சரிபார்க்க முடியும். இந்தக் கட்டுப்பாடு ஒரு செயலிக்கு மட்டும் அல்ல. நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலிக்கும் (Google Pay, PhonePe, Paytm போன்றவை) நாளுக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸை பார்க்க முடியும். அதேபோல், பயனாளர்கள் பரிமாற்றம் செய்யும் ஒவ்வொரு முறைக்கும் வங்கி, அவர் கணக்கில் உள்ள மீதி தொகையை இணைக்க வேண்டும்.
யுபிஐ மூலம் செய்யப்படும் மறு கட்டணங்கள் மற்றும் தானாக நடைபெறும் பரிவர்த்தனைகள் (Recurring Payments மற்றும் Auto Transactions) குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். அதன்படி, காலை 10 மணி முன்பும், மதியம் 1 மணி முதல் 5 மணி வரையும் இரவு 9:30 மணி பிறகு மட்டுமே பணம் எடுக்கப்படும். இதன் காரணம், காலை 10 மணி முதல் 3 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 9:30 மணி வரை இருக்கும் பிக் ஹவர் நேரங்களில் தானாக பணம் பிடிக்கும் செயல்முறைகளை தவிர்ப்பதாகும்.
மேலும், தானாக பணம் பிடிக்கும் (Autopay mandate) போது, சில தவறுகள் ஏற்பட்டால், சில முறை மீண்டும் முயற்சி செய்யப்படும். அதன்பின் கட்டணம் பிடிக்கப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், பயனர்கள் தங்களுடைய மொபைல் எண்ணுடன் தொடர்புடைய தகவல்களை தினமும் அதிகபட்சம் 25 முறை மட்டுமே பெற முடியும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளின் பட்டியலைப் பார்க்கலாம். இந்த கோரிக்கைகள், வாடிக்கையாளர் யுபிஐ செயலிகளில் எந்த வங்கி என்பதை தேர்ந்தெடுத்த பிறகு மட்டுமே தொடங்கப்பட வேண்டும்.
யுபிஐ செயலியில் பரிவர்த்தனையின் உண்மையான நிலை (Payment Status) சில விநாடிகளுக்குள் காட்டப்பட வேண்டும். "Pending" அல்லது "Processing" என்ற பொதுவான தகவல்களுக்கு பதிலாக, தெளிவான நிலைமை தெரியப்படுத்தப்பட வேண்டும். பயனர்கள் ஒரு பரிவர்த்தனையின் நிலையை சரிபார்க்க மொத்தம் 3 முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும். ஒவ்வொரு முறையிலும் 90 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த மாற்றங்கள், பயனர்களுக்கு தெளிவான தகவலை வழங்கவும், பிழைகளைத் தவிர்க்கவும், UPI பயன்பாட்டின் நம்பிக்கையை அதிகரிக்கவும் செயல்படுத்தப்படுகின்றன.
அதேபோல், இனி ஒரு பயனர் யுபிஐ வழியாக பணம் அனுப்பும் போதெல்லாம், அந்தப் பணம் பெறும் நபரின் பதிவு செய்யப்பட்ட பெயர் பரிவர்த்தனை செய்யும் முன் திரையில் காண்பிக்கப்படும். பலரும் யுபிஐ பயன்பாட்டை நம்பிக்கையுடன் ஏற்கவும் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications