பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கூடிய விரைவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல விசா கோருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதனை அடுத்து அமெரிக்க அரசு இந்தியாவில் தங்களுடைய தூதரகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஜனவரி மாத இறுதிக்குள் அமெரிக்க துணை தூதரகம் ஒன்று பெங்களூருவில் அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல இந்த ஆண்டுக்குள் அகமதாபாத்திலும் ஒரு துணை தூதரகம் அமைக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் இந்த திட்ட பணிகள் எப்போது தொடங்கப்படும், எப்போது தூதரகம் நிறுவப்படும் என்ற தகவல்கள் அப்போது வெளியாகவில்லை. இந்த நிலையில் ஜனவரி இறுதிக்குள் அமெரிக்க துணை தூதரகம் பெங்களூருவில் தொடங்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் அமைக்கப்படுவதை வரவேற்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் பெங்களூரு முக்கிய பங்களிக்கிறது எனக் கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அது ஏன் அவசியம் என்பது குறித்தும் தான் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு அமைச்சர் ஜெய்சங்கர் பெங்களூருக்கு வருகை தந்த போது நிச்சயம் இங்கே அமெரிக்க துணை தூதரகம் அமைக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி 2023 ஆம் ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் என தேஜஸ்வி சூர்யா தன்னுடைய எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் எந்த தேதியில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுகிறது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு செல்ல விசா விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றால் சென்னை அல்லது ஹைதராபாத்திற்கு தான் அவர்கள் வந்து செல்ல வேண்டி இருந்தது.
பெங்களூரில் தான் பெரும்பான்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன எனவே அந்த துறை சார்ந்த இயங்குபவர்கள் அடிக்கடி அமெரிக்கா சென்று வர வேண்டி இருக்கிறது. தற்போது அமெரிக்க துணை தூதரகம் பெங்களூருவிலேயே அமைக்கப்பட்டுவிட்டால் பெங்களூருவாசிகள் விசாவுக்காக வேறு நகரங்களுக்கு சென்று அலைய வேண்டிய தேவை இருக்காது.
Story written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications