அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு விசா நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அப்படி டிரம்ப் அரசு கொண்டு வந்துள்ள ஒரு மாற்றம் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க விசா பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அக்டோபர் 1 முதல் அமெரிக்க அரசு புதிய விசா ஒருங்கிணைப்புக் கட்டணத்தை (Visa Integrity Fee) அமலுக்கு கொண்டு வர உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்க விசா பெறுவதற்கான செலவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கொள்கையின்படி, 250 டாலர் (சுமார் ரூ.22,000) விசா ஒருங்கிணைப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும். இதனால், மொத்த விசா செலவு 442 டாலராக (சுமார் ரூ.40,000) உயரக்கூடும் என அமெரிக்க பயணச் சங்கம் (US Travel Association) மதிப்பிடுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவிற்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2.5% குறைந்துள்ள நிலையில், இந்தக் கட்டண உயர்வு மேலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் 18% சரிந்துள்ளது. இதற்கு டிரம்ப் அரசு மாணவர்களுக்கு விசா வழங்குவதில் பல கெடுபிடிகளை காட்டுவதே முக்கிய காரணம்.
டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் பல்வேறு நாடுகளுடனான வர்த்தகப் பிரச்சினைகள் காரணமாக, அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. புதிய விசா ஒருங்கிணைப்புக் கட்டணம், ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கப் பயணத் துறைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்காவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.1% குறைந்து 19.2 மில்லியனாக இருந்தது. புதிய விசா கட்டண விதிகள் மெக்சிகோ, அர்ஜென்டினா, இந்தியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அதிகம் பாதிக்கும். உலக பயண மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel & Tourism Council) வெளிநாட்டவர்களி வருகை குறைவது அமெரிக்காவின் வருவாயையும் பாதிக்கும் என கணித்துள்ளது.
2026 FIFA உலகக் கோப்பை மற்றும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் போன்ற நிகழ்வுகளிலும் இதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர விசா பிணை (Visa Bonds) திட்டமும் ஒரு சுமையாக மாற வாய்ப்புள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், மாணவர்கள், கலாச்சாரப் பரிமாற்றப் பார்வையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கான விசா காலக்கெடுவை கட்டுப்படுத்த 15,000 டாலர் பிணைத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
சுற்றுலா மற்றும் வணிக விசா விண்ணப்பதாரர்களும் 15,000 டாலர் பிணை செலுத்த நேரிடும். இந்த திட்டத்திற்கான பைலட் திட்டம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கப்பட்டது. விசா காலத்தை மீறி தங்குபவர்களைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications