அமெரிக்கா, விசா விதிமீறலைக் குறைப்பதற்காக ஒரு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது, சில வெளிநாட்டு பயணிகளிடம் 15,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.60 ஆயிரம்) விசா பாஸ் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தீவிரமாக செயல்படுத்த இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை திங்கட்கிழமையன்று அறிவித்தது.
இந்த நடவடிக்கை, ஜனவரி மாதத்தில் மீண்டும் பதவியேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புலம்பெயர்வுத் தணிக்கைகளை கடுமையாக்கும் தொடர்ச்சியான முயற்சிக்கான ஒரு பகுதியாகும். இது, விசா முறையை கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

12 மாதங்களுக்கு அமலில் இருக்கும் இந்த விசா பாஸ் திட்டம், ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம், B-1 வணிக விசா மற்றும் B-2 சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கும், விசா காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் தங்கும் அபாயம் அதிகம் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீது மட்டுமே அமலில் இருக்கும். இந்த பயணிகள், விசா பெறும்போது ரூ.60 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.
பயணிக்க வந்தவர் விசா விதிமுறைகளை பின்பற்றி, தங்க அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நாடு விட்டு வெளியேறினால், பாதுகாப்புத் தொகை திருப்பி அளிக்கப்படும். ஆனால், விதிகளை மீறி தங்கினால், முழு தொகையும் அரசுக்கே சேர்ந்துவிடும். மேலும், இந்த திட்டத்தின் கீழ் பாதுகாப்புத்தொகை கட்டும் பயணிகள், அமெரிக்காவுக்குள் நுழைவதும் வெளியேறுவதும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில விமான நிலையங்களிலேயே இருக்கும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்க உள்துறை பாதுகாப்பு துறையின் (DHS) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, அதிக விசா விதிமீறல் (overstay) உடைய நாடுகளின் குடிமக்கள் இந்த புதிய பாதுகாப்புத் தொகை கட்டுப்பாட்டின் குறிக்கோளாக உள்ளனர். விசா விண்ணப்பங்களை ஆய்வு செய்வதிலும் பரிசோதனை செய்வதிலும் பொதுவாக பின்வாங்கல் உள்ள நாடுகள், நடப்புத் தங்குமிடம் தேவைப்படாமலே முதலீடு மூலம் குடியுரிமை வழங்கும் நாடுகள், அமெரிக்க வெளிநாட்டு கொள்கை அடிப்படையிலான கவலைகள் ஏற்படும் நாடுகள் இதனால் பாதிக்கப்படும்.
இன்னும் எந்தெந்த நாடுகள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் என்பதை, அரசு அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், மியான்மர், டோகோ உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு, இவ்வாறு அதிக அபாயம் உள்ள நாடுகளின் பயணிகள் அமெரிக்கா நோக்கி செல்ல பாதுகாப்புத் தொகை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள்.
இந்த திட்டம் ஒரு Pilot Program-ஆக ஆகஸ்ட் 20 முதல் ஓராண்டு காலம் செயல்படுத்தப்படும். தற்போது, B-1 மற்றும் B-2 விசாக்கு மட்டுமே பொருந்தும். இது அதிக விசா விதிமீறல் உள்ள நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே அமலில் இருக்கும். "எத்தனை பேர் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவர் என இப்போதைக்கு கணிக்க முடியாது. ஆனால், எதிர்காலத்தில் நாடுகளின் பட்டியல் மற்றும் விதிமுறைகள் மாற்றப்படும்" என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications