நாட்டில் இப்போது 62க்கும் மேற்பட்ட மார்க்கங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்த இந்த ரயில்களுக்கு மக்கள் வரவேற்பு அதிகரித்துள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தொடர்ந்து நகரங்களுக்கு இடையே வந்தே மெட்ரோ ரயில்களை இந்திய ரயில்வே இயக்கவுள்ளது. வந்தே மெட்ரோ ரயில்களின் பரிசோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெறும்.

வந்தே மெட்ரோ ரயில்கள் 100 முதல் 250 கி.மீ. தொலைவில் உள்ள நகரங்களையும் அருகேருகே உள்ள சாட்டிலைட் டவுண்களையும் இணைக்கும். வந்தே மெட்ரோ ரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்படும். நகரங்களுக்குள் ரயில் போக்குவரத்து நேரத்தைக் குறைக்கும் வகையில் இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் அதிவேகமாக செல்லும்.
இதைத் தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். அநேகமாக ஜூன் மாத இறுதியில் வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மெட்ரோ ரயில்களை விட அதிக வேகத்தில் இயக்கப்படும் வந்தே ம மெட்ரோ ரயில்களுக்கு அலுவலகம் செல்வோரிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. பெரிய நகரங்களை இணைக்கும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரவில் மட்டுமே இயக்கப்படும். அதிகபட்சம் 1000 கி.மீ. தொலைவில் உள்ள பெருநகரங்களை இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இணைக்கும். ஒவ்வொரு ரயிலிலும் 15 பெட்டிகள் இருக்கும்.
ஜூலை 2024 முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும்.
முதல் ரயில் மும்பையிலிருந்து அயோத்தி செல்கிறது. இரண்டாவது தடம் மத்தியப் பிரதேசத்தில் இருந்து அயோத்தி செல்கிறது. மத்தியப் பிரதேசத்தையும் ராஜஸ்தானையும் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைக்கும்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து ஸ்லீப்பர் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டிருந்தது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
பகல் நேரத்தில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்போது இந்தியாவில் இயங்கும் மற்ற அதிவேக ரயில்களைக் காட்டிலும் வேகமாக ஊர்களுக்குச் செல்கிறது. ஒரேநாளில் அந்த ஊர்களில் தங்களது வேலைகளை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்ப வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உதவியாக இருந்தன.
இந்த நிலையில் ஒருசில நாட்கள் தங்க வேண்டியிருந்தால் வேலையை முடித்து விட்டு இரவோடு இரவாக ஜாலியாகப் படுத்துக் கொண்டே களைப்புத் தெரியாமல் வீடு திரும்ப இனி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் உதவியாக இருக்கும்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications