புதிய வந்தே பாரத் ரயில்: சென்னை டூ நாகர்கோயில்.. வெறும் 8.50 மணி நேரத்தில் செல்லலாம்..!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுவும் சேர்ந்தால் அந்த எண்ணிக்கை 6ஆக அதிகரிக்கும்.

இந்தியாவில் தற்போது வந்தே பாரத் ரயில்களின் சேவை வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் கூட பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

புதிய வந்தே பாரத் ரயில்: சென்னை டூ நாகர்கோயில்.. வெறும் 8.50 மணி நேரத்தில் செல்லலாம்..!

தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புதிய வந்தே பாரத் ரயிலானது சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு வரை இயக்கப்படும் என தெரிகிறது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னதாக இந்த பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட இருக்கிறது.

புதிய வந்தே பாரத் ரயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி எக்ஸ்பிரஸூக்கு அடுத்தபடியாக இந்த பாதையில் இயக்கப்படக்கூடிய வேகமான ரயிலாக இது இருக்கும்.

தற்போது இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணத்தை முடிக்கிறது.

எழும்பூர் மற்றும் நாகர்கோவில் இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் எட்டு பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ் , மீதமுள்ள 7 பெட்டிகள் ஏசி சேர் காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வந்தே பாரத் ரயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1. 50 மணியளவில் நாகர்கோயிலை சென்று அடைய உள்ளது. மீண்டும் நாகர்கோவிலில் 2. 20க்கு புறப்படும் இந்த ரயிலானது இரவு 11.15 மணிக்கு சென்னை வந்து அடையும்.

தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து மைசூரு, சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர், சென்ட்ரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து திருநெல்வேலி மற்றும் மைசூரிலிருந்து சென்ட்ரல் என 5 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் 6ஆவது எழும்பூர்- நாகர்கோவில் ரயில் சேர உள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+