டெல்லி: இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுதில் இருந்தே ரயில்வே துறை நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பிரதான திட்டமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கருதப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டை பொருத்தவரை இந்தியாவின் பல்வேறு வழித்தடங்களிலும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மதுரை - பெங்களூர் : தமிழ்நாட்டின் மதுரை மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தது. தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் இணைக்கக்கூடிய இந்த ரயில் சேவையானது தென்னிந்தியாவின் இரண்டு பிரதான நகரங்களை இணைக்கும் வகையில் இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர்.

சென்னை – நாகர்கோவில்: தமிழ்நாட்டின் இரண்டு முக்கியமான பகுதிகளை இணைக்க கூடிய வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்திய அரசு சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் சுற்றுலா துறையும் இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் மேம்பட்டு உள்ளது.
மீரட் – லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரண்டு பிரதான நகரங்களை இணைக்க கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மீரட் மற்றும் லக்னோ இடையிலான இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மூலம் இரண்டு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் பெருமளவில் குறைந்து விட்டது.
டாடாநகர்- பாட்னா : செப்டம்பர் 15ஆம் தேதி மத்திய அரசு ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் இரண்டு முக்கியமான நகரங்களை இணைக்கக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகம் செய்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் மற்றும் பீகார் மாநிலத்தின் பாட்னா நகரங்களை இணைக்கக்கூடிய இந்த ரயில் சேவை மூலம் இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து எளிமையானது.
பாகல்பூர் – ஹவுரா: பீகார் மாநிலத்தின் பாகல்பூரையும் மேற்குவங்க மாநிலத்தின் ஹவுராவையும் இணைக்க கூடிய வகையில் செப்டம்பர் 15ஆம் தேதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரயில் தம்கா வழியாக இயக்கப்படுவதால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.
பிரம்மாபூர்- டாடா நகர்: இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தையும் ஜார்க்கண்ட் மாநிலத்தையும் இணைக்கக்கூடிய இந்த ரயில் சேவை இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுலா மற்றும் தொழில் மேம்பாட்டுக்கு உதவுகிறது.
டெல்லி – பாட்னா: டெல்லி மற்றும் பாட்னா இடையே எக்ஸ்பிரஸ் ரயில் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பீகாருக்கும் இந்திய நாட்டின் தலைநகருக்கும் இடையிலான பயண நேரம் பெருமளவில் குறைக்கப்பட்டது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொருத்தவரை பல்வேறு நவீன அம்சங்களுடன் செயல்படுகின்றன. அதுமட்டுமின்றி பாரம்பரிய ரயில்களை விட பயண நேரத்தையும் வெகுவாக குறைக்கின்றன. கூடிய விரைவில் மத்திய அரசு படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications