எக்ஸ் தளத்தின் புதிய பயனர்களுக்கு கெட்ட நேரம் போல. அவர்கள் பதிவிடும் போஸ்டிங்குகளுக்காக இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தின் ஒரு பயனருக்கு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் சிஇஓவான எலான் மஸ்க் பதிலளிக்கையில், துரதிர்ஷ்டவசமாக புதிய பயனர்களுக்கு சிறியதொரு தொகை கட்டணமாக விதிக்கப்படும். இதன் மூலம் தளத்தில் பாட்களின் (BOT) செயல்பாடு கட்டுப்படுத்தப்படும் என்றார்.

தற்போதைய ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் நீங்கள் பாட்டா ( 'are you a bot') என்ற சோதனையை எளிதாகக் கடந்து விடுகின்றன. போலி அக்கவுன்ட்களின் தாக்குதல் காரணமாக ஸ்பேஸ் அதிகளவு ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் நல்ல ஹேண்டில்கள் இதில் பங்கு பெறமுடியாமல் போய் விடுகிறது.
இது சிறியதொரு கட்டணத்தை செலுத்துவதைக் காட்டிலும் உண்மையான மனிதர்கள் செய்யும் பதவி மக்களுக்கு காட்ட முடியாதது கடினமான விஷயமாகும். ஒரு முறை பணத்தை செலுத்திவிட்டால் மூன்று மாதங்கள் கழித்து அவர்கள் இலவசமாக பதிவுகளை அப்லோடு செய்யலாம் என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் வெரிபை செய்யப்படாத நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் நாட்டு யூசர்களிடம் 1 டாலரை எக்ஸ் தளம் கட்டணமாக வாங்கத் தொடங்கியது. பாட்களை அகற்றுவதற்காக இந்த சோசியல் மீடியா தளம் நடவடிக்கை எடுத்ததால் நிறைய எக்ஸ் பயனர்கள் ஏகப்பட்ட ஃபாலோயர்களை இழந்தனர்.
கடந்த சில மாதங்களில் எக்ஸ் தளத்தில் ஸ்பாம், ஆபாச பாட்கள் குவியத் தொடங்கியதால் நல்ல யூசர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
பாட்களையும் டிரோல்களையும் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் எத்தனை பாட்கள் இப்போது செயல்படுகின்றன என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
பாட் என்பது ஒரு ஆட்டோமேடிக் சாப்ட்வேர் பயன்பாடாகும். இது ஒரு நெட்வொர்க்கில் மீண்டும் மீண்டும் பணிகளைச் செய்கிறது. மனித நடத்தையைப் பின்பற்றுவதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. மனித தலையீடு இல்லாமல் ஒரு பாட் சுயமாக இயங்க முடியும்.
பாட்களைப் பயன்படுத்தும் நன்கு அறியப்பட்ட சேவைகள் என்றால் பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப், ஸ்லாக் போன்ற உடனடி மெசஞ்சர் பயன்பாடுகளைக் கூறலாம்.
சமூக ஊடக பாட்கள் என்பது சமூக ஊடகங்களில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஆட்டோமேடிக் புரோகிராமகள் ஆகும். இந்த பாட்கள் ஓரளவு அல்லது முழுமையாக சுயமாக செயல்படுகின்றன.
அவை பெரும்பாலும் மனித பயனர்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நல்ல சமூக ஊடக பாட்கள் இருக்கும்போது, பல சமூக ஊடக பாட்கள் நேர்மையற்ற மற்றும் மோசமான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.
கூகுள் அசிஸ்டண்ட், சிரி போன்ற சாட்போட்கள். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பொது தகவல்களைப் பகிர்வதற்காக உலக சுகாதார நிறுவனம் வாட்ஸ்அப்பில் ஒரு பாட்டை உருவாக்கியுள்ளது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications