2024 முடிய சரியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், புது ஆண்டு 2025 தொடங்கவுள்ளது. இந்த நாள் ஆனது பொதுவிடுமுறை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினருக்கும் சில கேள்விகள் இருக்கும். அதிலும் குறிப்பாக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை திறக்கப்படுமா அல்லது மூடப்படுமா என்ற சந்தேகம் இருக்கும். அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் வரும் 2025 ஆம் ஆண்டிற்கான முழு விடுமுறை பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முடிய இன்னும் 2 வர்த்தக நாட்கள் மட்டுமே உள்ளது. டிசம்பர் 30 (திங்கள்) மற்றும் டிசம்பர் 31 (செவ்வாய்கிழமை) ஆகும். புத்தாண்டு தொடங்கும் வேளையில், வரும் ஜனவரி 1 அன்று புதன்கிழமை பங்குச் சந்தை வழக்கம்போல் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாறாக ஜனவரியில் மொத்தம் 8 நாட்கள் விடுமுறை விடப்படும். இவை 4 சனிக்கிழமை மற்றும் 4 ஞாயிற்றுக்கிழமைகள் ஆகும். இதில் ஜனவரி 26 குடியரசு தின விடுமுறை ஆனது ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

ஒவ்வொரு காலண்டர் ஆண்டு தொடங்கும் முன், தேசிய பங்குச் சந்தை மற்றும் BSE விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது. 2025 ஆம் ஆண்டில், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் 14 விடுமுறைகள் இருக்கும். என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ வெளியிட்ட விடுமுறைப் பட்டியல் அடிப்படையில், ஜனவரி 1 (புதன்கிழமை) இல் இருந்து நீக்கப்பட்டு ஜனவரி 1ஆம் தேதி பங்குச் சந்தை திறக்கப்படும்.
மும்பை பங்குச் சந்தை இணையதளத்தின்படி, ஜனவரி 1, 2025 அன்று பங்கு, பங்கு வழித்தோன்றல்கள் பிரிவு மற்றும் செக்யூரிட்டி லெண்டிங் மற்றும் பாரோயிங் (SLB) பிரிவுகளில் வழக்கம் போல் வர்த்தகம் நடைபெறும். பங்குச் சந்தை காலை 9:15 மணிக்குத் திறந்து மாலை 3:30 மணிக்கு மூடப்படும்.
ஜனவரி 2025 இல், பங்குச் சந்தை 8 நாட்கள் (4 சனி மற்றும் 4 ஞாயிறு) மூடப்படும். ஜனவரி 26 அன்று கொண்டாடப்படும் குடியரசு தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வருவதால் அந்த நாள் விடுமுறையுடன் உள்ளது.
பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் 2025: ஜனவரி 26 ஞாயிற்றுகிழமை: குடியரசு தினம்
பிப்ரவரி 26, புதன்: மகாசிவராத்திரி
மார்ச் 14, வெள்ளி: ஹோலி
மார்ச் 31, திங்கள்: இத்-உல்-பித்ர்
ஏப்ரல் 06 ஞாயிறு: ஸ்ரீ ராம் நவமி
ஏப்ரல் 10, வியாழன்: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 14, திங்கட்கிழமை: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 18, வெள்ளி: புனித வெள்ளி
மே 1, வியாழன்: மகாராஷ்டிரா தினம்
ஜூன் 07 சனி: பக்ரீத்
ஜூலை 06 ஞாயிறு: முஹாரம்
ஆகஸ்ட் 15, வெள்ளி: சுதந்திர தினம்
ஆகஸ்ட் 27, புதன்: விநாயக சதுர்த்தி
அக்டோபர் 2, வியாழன்: மகாத்மா காந்தி ஜெயந்தி / தசரா
அக்டோபர் 21, செவ்வாய்: தீபாவளி
அக்டோபர் 22, புதன்: தீபாவளி பலிபிரதிபடா
நவம்பர் 5, புதன்: பிரகாஷ் குர்புர்ப் ஸ்ரீ குருநானக் தேவ்
டிசம்பர் 25, வியாழன்: கிறிஸ்துமஸ்
பட்ஜெட் நாள் பிப்ரவரி 1 பங்குச் சந்தை திறக்கப்படும்: பங்குச் சந்தை வரும் மத்திய பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் நாளில் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும் என என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ தெரிவித்துள்ளன.
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications